சீமானும் சினமாக்காரர்தான்.. மறந்துடாதீங்க.. விஜய் ஆண்டனியை சீண்டிய நாம் தமிழர்.. விளாசிய நவீன்!
வந்தாரை வாழ வைக்கும் மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
சென்னை: வடஇந்தியர்கள் குறித்து நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து உள்ளது. இது தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி பேசிய கருத்து ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாடடில் கடந்த சில மாதங்களாக வடஇந்தியர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வடஇந்தியாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன.

வடஇந்தியர்கள்
இந்த மொத்த விஷயமும் இரண்டு விதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஒன்று வடஇந்தியர்கள் வருகை தவறு. அவர்கள் தமிழ்நாடு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். குறைந்த கூலிக்கு வேலை பார்த்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அதே சமயம் நமது கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களை அனுமதிக்க கூடாது. நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இது நம்முடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆதரவு
இன்னும் சிலரோ.. டெல்லி முழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள். மும்பையில் தமிழர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தாவில் பல கடைகளை தமிழர்களே நடத்துகிறார்கள். பெங்களூரில் வைட் பீல்ட் முழுக்க தமிழர்களே நிறைந்து இருக்கிறார்கள். அடித்தட்டு வேலை தொடங்கி ஐடி வேலை வரை பார்க்கிறார்கள். நாம் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் பிற மாநில மக்கள் நம் ஊருக்கு வந்தால் என்ன தப்பு? என்ற வாதமும் வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன தமிழ் சமூகம் இப்படி பேசுவது சரியா.. வந்தாரை வாழ வைக்கும் மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி
இந்த நிலையில்தான் வடஇந்தியர்கள் வருகை தவறு இல்லை என்று கூறும் வகையில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர், என்று குறிப்பிட்டு இருந்தார். நாம் தமிழர் கட்சியினர் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வடஇந்தியர்கள் வருகையை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சியினர் விஜய் ஆண்டனி கருத்தை எதிர்க்கிறார்கள்.

என்ன சொன்னார்கள்?
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தி இது தொடர்பாக பேசிய கருத்துக்கள்தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. விஜய் ஆண்டனி சினிமாக்காரர். அவருக்கு தாய் அக்கா தங்கை, பக்கத்துக்கு வீட்டு பொண்ணு, எதிர் வீட்டு பொண்ணு எல்லாம் ஒன்றுதான். அவனுக்கு தேவை அதுதான். அதுதான் எல்லோரிடமும் இருக்கிறதே. அவர் எல்லோரிடமும் போவார். நாம் போக மாட்டோம் என்று இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்திற்கு இயக்குனர் நவீன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இதுதான் நாதகவின் தரமா? அண்ணன் சீமானும் ஒரு சினிமாகாரர்தான் என்பதை மறந்துவிடாதீர். முதலில் மனிதராக மாறுங்கள். பிறகு தமிழர்களுக்காக கட்சி நடத்துங்கள். இந்த தரம்தாழ்ந்த பேச்சிற்காக விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேளுங்கள், என்று கூறி உள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications