"ண்ணே, நில்லுண்ணே, வந்துடறேன்".. பேசிட்டிருக்கும்போதே டக்குனு திரும்பி சொன்ன சீமான்.. கவனித்த ஈரோடு
நாம் தமிழர் கட்சியின் சீமான் புது வியூகத்தை இந்த முறை இடைத்தேர்தலில் அமல்படுத்தி உள்ளார்
ஈரோடு: இந்த முறை இடைத்தேர்தலில் புது வியூகம் ஒன்றை, நாம் தமிழர் கட்சி சீமான் கையில் எடுத்துள்ளார்.. இதனால் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.. இங்கு ஆரம்பம் முதலே தன்னுடைய கவனத்தையும் குவித்து வருகிறது..
ஏற்கனவே இந்த தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெற்றுள்ள இந்த கட்சி, இந்த முறை அதை பலப்படுத்தும் நோக்கில் களத்தில் இறங்கி உள்ளது.

முதலியார் ஓட்டுக்கள்
இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, புது வியூகம் ஒன்றை சீமான் கையாண்டுள்ளார்.. எப்போதுமே சாதீய வாக்குகளை குறி வைத்து வேட்பாளரை களமிறக்காதவர், இந்த இடைத்தேர்தலில் முதலியார் வாக்குகளை குறி வைத்துள்ளார்.. மொத்த கட்சியையும் கடுமையாக விமர்சித்து வரும்நிலையில், பிரதான கட்சிகளின் பார்வையும் இப்போது நாம் தமிழர் கட்சி மீதே குவிந்து வருகிறது.. சீமானின் பிரச்சாரங்கள் தினமும் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், இந்த முறை அக்கட்சியின் வாக்கு வங்கி உயரும் என்றும், இதை முதலில் தகர்க்க வேண்டும் என்றும் திமுக, அதிமுக கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனவாம்.

கமலின் மய்யம்
அடுத்ததாக, திமுக அரசு மீதான அதிருப்தி வாக்குகளை, தன்பக்கம் திருப்ப முயற்சித்து வருகிறது நாம் தமிழர் கட்சி.. இது அதிமுகவை கடுப்பாக்கி உள்ளதாம்.. ஏற்கனவே கமலின் மய்யமானது, திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை சீமான் பிரித்துவிட்டால், கொங்குவில் நிலைமை சிக்கல் என்பதையும் அதிமுக உணராமல் இல்லை.. அதனாலேயே, எந்த கட்சி அதிருப்தியாளர்கள் என்றாலும், அவர்களுக்கு வலையை வீசவும் ஒரு டீம் களத்தில் இறங்கி உள்ளதாம்.. இதற்கு நடுவே சீமானின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்றுகூட சீமான் பேசிய பேச்சுக்களை, அவரது கட்சியினர் ஷேர் செய்து வருகிறார்கள். அதன் சுருக்கம்தான் இது:

மண்டை உடைப்பேன்
"பேனாவையே புகழ்ந்து பேசிட்டிருக்காங்களே.. அது எப்படிப்பட்ட பேனா தெரியுமா? என்று புகழ்கிறார்கள்.. நான் அதை, எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினேன் என்றால், வெளியில் தலைகாட்ட முடியாது... அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா கிடையாது.. பார்த்து பேசணும்.. உடைப்பீயா சீமான்? என்றால், ஆமாம் உடைப்பேன்.. இதையே ஓயாமல் கேட்டால், மண்டையை உடைப்பேன்... நீங்க அதிகார திமிரில் ஆட்டத்தை போட்டுப் பேனாவை வைத்தால், என் அதிகாரம் எனக்கு வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது. பெயர்த்து எறிந்து விடுவேன்.

மூளை எதுக்கு?
2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் நிற்கும்... இதுக்கு மேலும் நீங்கள் ஏமாந்தால் நான் ஒன்னும் பண்ண முடியாது.. திமுகவுக்கு போட்டேன், அதிமுகவுக்கு போட்டேன் என்று, எங்களை தூக்கி நடுத்தெருவில் போடறீங்களே.. இப்படியே முச்சந்தியில் இருந்து கத்திட்டே போக முடியாது... இனிமேல் யாராவது போராட்டம் என்று என்னை அழைத்தால், பேசாமல் விழுந்து படுத்துக்குவேன்... எவன் பிரச்சினையை தருகிறானோ, அவனுக்கே அதிகாரத்தையும் வலிமையும் தருவேன் என்றால், இது என்ன மாதிரியான மண்? இதுக்கு எதுக்கு கல்வி? எதுக்கு மூளை என்கிற உறுப்பு? அறிவு இருக்கா இல்லையா?..

நில்லுண்ணே
பிபிசி ஆவணப்படம் எடுத்ததற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள்.. பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுறேன்.. நான் கூடத்தான் திரையிட்டேன்... எங்கே, என் வீட்டில் ஒரு ரெய்டு விடுங்களேன், பார்ப்போம்" என்று பேசினார். "ஊழல், லஞ்சம் பெறுபவர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாக" என்று நபிகள் நாயகம் சொல்கிறார். நீங்கள் ஊழல், லஞ்சம் பெறுகிறீர்கள் என்று சொல்லவில்லை. லஞ்சம் பெறுகிற திமுக, அதிமுகவிற்கு வாக்குகள் செலுத்தினாலும் இறைவனின் சாபம் உண்டாகும்...

வெயிட் அண் சீ
உதயசூரியனுக்குத்தான் வாக்குகளை போட்டுட்டீங்களே, புதுசாகவா போடப்போகிறீங்க? விடுதலை பெற்ற இந்தியாவை 50 வருடங்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கியது அந்த கை சின்னம் தான்.. சிஏஏ, என்ஆர்சி, ஜிஎஸ்டி இப்படி எல்லாத்தையும் கொண்டு வந்தது இந்த சின்னம் தான். அதற்கு உடன் நின்றது இந்த திமுக" என்று கடுமையாக சீறியிருந்தார்.. சீமான் இப்படி ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தபோதே, ஒரு குழந்தை சீமானை அழைத்த சத்தம் கேட்டது... உடனே டக்கென திரும்பிய சீமான், "பேசிட்டு வந்துடுறேன். கொஞ்ச நேரம் நில்லுண்ணே... வந்து விடுகிறேன். வெயிட் அண்ட் சீ"என்று குழந்தைக்கு பதிலை சொல்லி, மீண்டும் தன் ஆவேசத்தை தொடர்ந்தார்..!!

சீமானும் காமராஜரும்
முன்னதாக, சூரம்பட்டியில் நடந்த பிரச்சார பேரணியானது, திருநகர் காலனி பொதுக்கூட்ட மேடைக்கு சென்றது. அப்போது கிருஷ்ணம்பாளையம் அருகே பிரச்சார பேரணி சென்ற போது அதே வழியில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக பேரணி சென்ற போது நாம் தமிழர் கட்சியினரும் அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் கொடிகளை உயர்த்தி பிடித்து மாறி மாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் ஊர்வலமாகச் சென்றவர் நாம் தமிழர் கட்சியினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.. ஊர்வலம் கடந்து செல்லும் வரை, அமைச்சர் காமராஜ் தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். பிறகு, சீமானும் காமராஜரும் வாகனத்தில் இருந்தவாறே ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர்
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications