Actor Arrest: திருவனந்தபுரத்தில் பரபரப்பு… விபத்து ஏற்படுத்திய நடிகர் அதிரடி கைது.. 2 பேர் படுகாயம்!
சென்னை: திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்த ஒரு விபத்து மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் மணியன்பிள்ளை ராஜுவுக்கு சொந்தமான சொகுசு கார், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களை மோதியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த உடனே அந்த இடத்தில் இருந்து கார் சென்றுவிட்டதாக கூறப்படுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
வழுதக்காடு பகுதியில் உள்ள பிரபல கிளப்பில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மணியன்பிள்ளை ராஜு தனது காரில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, அந்த வழியாக வந்த பைக்குடன் கார் மோதியது.
இந்த மோதலில் பைக்கில் சென்ற நிவேதித் கிருஷ்ணா, சூரஜ் ஆகிய இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசின் நடவடிக்கை
தகவல் கிடைத்ததும் மியூசியம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுவதால், இது 'ஹிட் அண்ட் ரன்' வழக்காகவும் பார்க்கப்படுகிறது.
நடிகர் மீது வழக்கு பதிவு
விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் மணியன்பிள்ளை ராஜுவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆரம்பத்தில் டிரைவர் காரை ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடிகரே காரை ஓட்டியதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று காலை மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஆஜரான மணியன்பிள்ளை ராஜுவை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகரின் விளக்கம்
போலீசிடம் வாக்குமூலம் அளித்த மணியன்பிள்ளை ராஜு, "நான் அந்த கிளப்பில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது வேகமாக வந்த பைக் என் காரின் பின்புறம் மோதியது. பயத்தில் அந்த இடத்தை விட்டு சென்றேன்.
நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவன். எனக்கு சிக்குன்குனியாவும் வந்துள்ளது. அதனால் மது அருந்துவது கிடையாது" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், விபத்துக்குப் பின் அங்கேயே நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் சென்றது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மணியன்பிள்ளை ராஜு - திரையுலகப் பயணம்
மணியன்பிள்ளை ராஜு மலையாள சினிமாவில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நடிகர். காமெடி, குணச்சித்திர வேடங்கள், தந்தை கதாபாத்திரங்கள் என பல்வேறு விதமான ரோல்களில் நடித்துள்ளார். சில படங்களில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சின்னத்திரையிலும் அவர் நடித்துள்ளதால், குடும்ப ரசிகர்களிடையே அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. அதனால் தான் இந்த விபத்து சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கவலை
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களின் நிலை குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். "பிரபலங்கள் என்றால் சட்டம் வேறா?" என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications