For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதயத்தோடு இணங்கி வாழ்வோம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News
Heart

<strong>முதல் பக்கம்...</strong>முதல் பக்கம்...

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அட்ரீனலின்- இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின்- இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்த அழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால் அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை.

சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்)என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 சதவீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.

மாரடைப்பைத் தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின்வரும் வழிகளை கையாளலாம்.

ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல் பொதுவாக ஒரு சராசரி மனிதனில் "எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.

<strong>3ஆம் பக்கம்...</strong>3ஆம் பக்கம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X