For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தொலைக்காட்சி தினம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

இரண்டாம் பக்கம்.....

முடிவாகத் தன்னுடைய 'இயந்திரத் தொலைக்காட்சி' ஆய்வுகளைக் கைவிட்ட ஜோன், கேத்தோட் டியூப்களைக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தினார். வண்ணங்களையும் தொலைக்காட்சியில் கொண்டு வர முடியுமென ஜோன் நம்பினார். அதற்கான முயற்சிகளில் ஜோன் தீவிரமாக ஈடுபட்டு அதனை 1943ல் நிரூபிக்கவும் முயன்றார். அவருடைய முயற்சி தோல்வி எனினும் பின் வந்த காலங்களில் அவருடைய முயற்சிகளே வண்ணத் திரைக்கு அடிப்படையாக அமைந்தது. வண்ணத்திரைக்கு மட்டுமல்ல மின் (Electronic) துறையில் ஜோனின் பல முயற்சிகளே பின்னர் மற்றவர்களால் சாதனைகளாகவும் புதுக்கண்டுபிடிப்புகளாகவும் மாறின. 1946 ஜூனில் ஜோன் மரணமடைந்தார்.

இந்த அடிப்படையில் வளர்ச்சி கண்ட தொலைக் காட்சி தற்போது பல விதமான தொழிநுட்ப மாற்றங்களுடன் மிக முக்கியமான தொலைத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. தொலைநுட்பத்தில் முன்னேறியுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் நடைபெறக்கூடிய தகவல்களை காட்சியுடன் உடனுக்குடன் அனைவருக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொது ஊடகமாகவே தொலைக்காட்சி திகழ்கின்றது.

நவீன காலத்தில் சம்சொங் 102 அங்குலம், எல் ஜி 102 அங்குலம், பேனசானிக் 103 அங்குலம். இவை, பல்வேறு வணிக நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ள மிக தெளிவான plasma தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவுகளாகும். போட்டியின் முடிவில்இ 103 அங்குலம் அளவுடைய பேனசானிக் தொலைக்காட்சிப் பெட்டியே உலகில் மிக பெரிய plasma தொலைக்காட்சிப் பெட்டியாக விளங்குகிறது.

இக்காலத்தில் மிக சிறிய செல்லிட தொலைபேசியிலும் தொலைக்காட்சியை காணக்கூடியதாக உள்ளது. சம்சொங் நிறுவனம் தயாரித்த Q1 என்னும் மிக சிறிய செல்லிட கணிணியின் திரை உள்ளங்கை அளவுடையதாக மட்டுமே இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் பெரிய அன்டனாக்கள் துணையுடன் இயங்கிய தொலைக்காட்சி, கேபல் தொலைக்காட்சி, இன்று செட்லயிட் தொலைக்காட்சி என்று நாளுக்கு நாள் வடிவமைப்புக்களிலும் முன்னேறிக் கொண்டேயுள்ளது.

தொலைக்காட்சி எனும்போது மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கை, இந்திய போன்ற நாடுகளில் திரைப்படங்களையும், நாடகங்களையும், மெகா சீரில்களையும் காண்பதற்கான ஒரு ஊடகம் என்ற ரீதியில் பெரும்பாலும் கருதப்படுகின்றது. ஆனால், தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மாத்திரமல்ல. இன்றைய தொலைக்காட்சி சேவைகளில் காணப்படும் போட்டி காரணமாக நேயர்களை கவர்ந்திழுப்பதற்காக வேண்டி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும்கூட தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த பல விடயங்களும் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்வி, அறிவியல், கலாசாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம், நாட்டு நடப்புகள், நிகழ்கால விடயங்கள்... என்று பல நல்ல பக்கங்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் முதல் முதலாக 1978ம் ஆண்டு ஐ.டீ.என். தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் அரச தொலைக்காட்சி சேவையாக ரூபவாஹினி உள்ளது. காலப் போக்கில் தனியார் தொலைக்காட்சிகளும் தமது ஒளிபரப்புக்களைத் தொடங்க அரசாங்கங்களினால் அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரம் இலங்கையில் தற்போது 15க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சி சேவைகள். காணப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ம் ஆண்டு முதன் முதலாக டெல்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது. இந்திய நாட்டில் தூர்தர்ஷனை மட்டுமே நம்பிய காலம் மாறி இன்றைய கால கட்டத்தில் செயற்கைக் கோள் ஒளிபரப்பின் மூலம் அதிகமான அலைவரிசைகளைக் காண முடிகிறது.

புதிய அலைவரிசைகளின் பிரவேசத்தினால் வேலைவாய்ப்புக்கள், விளம்பர செயற்பாடுகள் என்றும் இல்லாத அளவிற்கு பல்கிப் பெருகின என்றும் கூறலாம். அநேகம் பேர் தனியார் தொலைக்காட்சிகளிலும் பணிபுரியலாயினர். ஊர்கள் தோறும் கேபிள் டி.வி. வைத்து தொழில் தொடங்கி வரும் பலரும் நன்மை அடைந்தனர்.

விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது "சமுதாய அலைவாங்கித் தொலைக்காட்சி ''(Community Antenna T.V.--CAT)" என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர். பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது- விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.

எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றித் தொடர்ந்து பார்ப்பவர்களது கண்கள் பாதிப்படைகின்றன என்றும் கூறப்படுகின்றது. இளைஞர்களது கவனம், கற்கை நெறிகளிலிருந்து சிறிது மாற்றம் பெறுவதையும் கவனிக்கலாம்.

புதிய சினிமாப்படங்கள் கேபிள் டி.வி. மூலம் போடப்படுவதினால் திரைப்பட இயக்குநர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்.

முதல் பக்கம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X