• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித இனம் அழியப் போவது பூமியில் அல்ல..!: இப்படி ஒரு சினிமா!!

By A K Khan
|

-ஏ.கே.கான்

நவம்பர் மாதத்தில் வெளியாகப் போகும் ஒரு படத்துக்கு இப்போதே உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கிவிட்டது. 'அந்த' ஸ்டார் படமா?, அதுல அவ்வளவு நல்ல பாட்டு இருக்கா?.. 2 'கீரோயினியா' (ஹீரோயின்), பரோட்டா சூரி இருக்காரா? என்று கேட்காதீர்கள்.

அழிந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து கிளம்பி அண்ட சராசரங்களை எல்லாம் கடந்து, அழுக்கில்லாத, ஒரு அழகிய பூமியைத் தேடும் படம் இது. படத்தின் பெயர் "இன்டர்ஸ்டெல்லார்".

"Mankind was born on Earth. It was never meant to die here''

இது தான் "இன்டர்ஸ்டெல்லார்" படத்தின் பஞ்ச் லைன்!.

கிறிஸ்டோபர் நோலன்:

கிறிஸ்டோபர் நோலன்:

கிறிஸ்டோபர் நோலன். பேட்மேனை மையமாக வைத்து டார்க் நைட் வரிசையில் 3 படங்களை இயக்கிய மெகா டைரக்டர். இவரது படங்களில் பேட்மேன் தான் ஹீரோ என்றாலும் அவர் 100 பேரை அடித்து துவம்சம் எல்லாம் செய்ய மாட்டார். வில்லன் கதாபாத்திரம் தான் பேட்மேனை விட பலம் வாய்ந்ததாக இருக்கும். மிரட்டலான பின்னணிக் காட்சிகள், பயமுறுத்தும் இசையுடன் உளவியல்ரீதியில் நம்மை பல கேள்விகளுக்கு உள்ளாக்கி, அடி மனதில் அச்சத்தை ஊட்டி திரைக் கதையை நகர்த்துவதில் அசகாய சூரர் நோலன்.

இன்ஸப்ஷன்:

இன்ஸப்ஷன்:

கனவுகளுக்குள் ஊடுருவி ஒருவரின் வாழ்க்கையை கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை மாற்றிப் போடும் கதையான இன்ஸப்ஷன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்கள் கிறிஸ்டோபர் நோலனை நன்றாக புரிந்து கொள்ள முடியும். லியானர்டோ டி காப்ரியோ நடித்த இந்தப் படத்தில் 3 அடுக்குகளாய் ஒருவரின் கனவுக்குள் புகுந்து (a dream within a dream within a dream) நிகழ்வுகள் வசப்படுத்தப்படும். இப்படி பிறரால் நுழைய முடியாத, யூகிக்க முடியாத தளத்தில் நின்று மெஸ்ஸி மாதிரி பந்தாடுபவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவர் தான் 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தை இயக்கியுள்ளார்.

மாத்யூ மெக்கொன்னாகி...ஆன்னி ஹேதவே:

மாத்யூ மெக்கொன்னாகி...ஆன்னி ஹேதவே:

மாத்யூ மெக்கொன்னாகி, ஆன்னி ஹேதவே, ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லன் பர்ஸ்டின், மைக்கேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தில்.

'இன்டர்ஸ்டெல்லார்' கதை..

'இன்டர்ஸ்டெல்லார்' கதை..

எதிர்காலம். சுற்றுச்சூழல் நாசமாகி, உலக நாடுகளின் பொருளாதாரங்கள் சீர்குலைந்து, பசியும் பட்டினியுமாக உலகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் வாழும் இந்த 20ம் நூற்றாண்டு மனிதர்கள் தான் மிக முக்கிய காரணம். இந்த அழிந்து போன உலகிலிருந்து தொடங்குகிறது 'இன்டர்ஸ்டெல்லார்' பயணம். Interstellar என்பது 'இரு வேறு நட்சத்திரங்களுக்கு அல்லது உலகங்களுக்கு இடையிலான' என்று பொருள்.

வார்ம்ஹோல்...

வார்ம்ஹோல்...

Universe எனப்படும் நமது பேரண்டம் நம்மால் யூகிக்க முடியாத அளவுக்குப் பெரியதாய், விரிந்ததாய், விரிந்து கொண்டே இருப்பதாய் இருக்கிறது. இதில் தான் பல ட்ரில்லியன் நட்சத்திர மண்டலங்களும், சூரிய குடும்பங்களும், கிரகங்களும், தூசு மண்டலமும் பரவிக் கிடக்கின்றன. இதில் wormhole என்று ஒரு கொள்கையை சமீபகாலமாக முன் வைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது, இதற்கு சரியான அர்த்தத்தை நமது பாஷையில் சொன்னால், 'குறுக்கு சந்து' என்று பொருள் வரும். (துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து மாதிரி)

புரியிற மாதிரி சொல்லுப்பா...

புரியிற மாதிரி சொல்லுப்பா...

யுனிவர்ஸை ஒரு பேப்பராக நினைத்து விரித்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரின் ஒரு முனையில் ஒரு புள்ளியை வையுங்கள். இன்னொரு முனையில் இன்னொரு புள்ளியை வையுங்கள். இந்த தூரத்தை குறித்துக் கொள்ளுங்கள். இப்போது இரு புள்ளிகளும் ஒன்றின் மேல் ஒன்று வருவது போல பேப்பரை அப்படியே மடியுங்கள். இப்போது இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் பல மடங்கு குறைந்திருக்கும். இது தான் wormhole!. அண்டத்தின் மிகப் பரந்து விரிந்த தூரத்தை wormhole மூலம் துரிதமாய் கடக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உண்மையா, இருக்கா..

உண்மையா, இருக்கா..

அப்ப யுனிவர்ஸை மடக்க முடியுமா, வார்ம் ஹோல் இருக்கா என்று கேள்விகள் எழும். இவையெல்லாம் நானோ, கிறிஸ்டோபர் நோலனோ சொல்லும் கதை அல்ல. ஜெனரல் ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்ன ஐன்ஸ்டீனும் அவருடன் இணைந்து ஹைட்ரஜன் அணு ஆராய்ச்சிகளைச் செய்த நேதன் ரோசனும் சொன்னவை. wormholeக்கு ஐன்ஸ்டீன்- ரோசன் பிரிட்ஜ் என்ற பெயரும் உண்டு. இவை வெறும் கற்பனையான் குறுக்கு சந்துகள் அல்ல, இயற்பியல் விதிகளின்படி இந்த சந்து சாத்தியமே என்கின்றனர் ஐன்ஸ்டீனும் ரோசனும்.

சினிமாவை பத்தி சொல்லு...

சினிமாவை பத்தி சொல்லு...

'இன்டர்ஸ்டெல்லார்' சினிமாவைப் பத்தி ஆரம்பித்துவிட்டு பிஸிக்ஸ் பாடம் நடத்துறியே என்று கோபமா?. வரும், தப்பில்லை. ஆனால், நாக்கையும் மூளையையும் 'நாக்குமுக்கா' போட வைக்கும் 'இஞ்சிமரபா' இயற்பியல் விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொண்டு இந்தப் படத்தைப் பார்த்தால் மேலும் ரசிக்க முடியும் என்பது நிச்சயம்.

இந்தப் படத்தின் கதை நாயகர்கள் wormhole மூலம் வேறோரு உலகைத் தேடி பயணிப்பதே 'இன்டர்ஸ்டெல்லார்' கதை.

கிராவிட்டி:

கிராவிட்டி:

சமீபத்தில் தான் இயக்குனர் அல்போன்ஸோ க்யூரோனின் கிராவிட்டி படம் வெளி வந்து, விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெளியே அல்லாடுவதை தத்ரூபமாகக் காட்டியிருந்தார். இதுவரை வந்த விண்வெளிப் படங்களிலேயே மிகச் சிறந்த, உண்மையிலேயே விண்வெளி எப்படி இருக்கும் என்பதைக் காட்டியவர் அல்போன்ஸோ க்யூரோன். கிராவிட்டி படத்தைப் பார்த்த உலக மக்களுக்கு அதைவிடச் சிறப்பான காட்சிகளுடன் படம் தந்தால் மட்டுமே கிறிஸ்டோபர் நோலனின் மானம் தப்பும். இது அவருக்குத் தெரியாதா.. இதனால் விண்வெளிக் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

மறுபடியும் முதல்ல இருந்து...

மறுபடியும் முதல்ல இருந்து...

'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் உலகம் வாழ லாயக்கில்லாத இடமாகிவிட, வேறு ஒரு உலகைத் தேடி கிளம்புகிறது நாஸா விஞ்ஞானிகள் குழு. இது ஏதோ விண்வெளி மையத்துக்கு போவது போல 2 நாள் வேலை அல்ல. நமது சூரிய மண்டலத்தை, புளுட்டோவை எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டிய பல வருடப் பயணம். வார்ம்ஹோலில் பயணித்து மனிதர்கள் வசிக்கக் கூடிய மாதிரி ஏதாவது கிரகம் இருக்கிறதா என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது இந்த விஞ்ஞானிகள் குழு. இதற்காக என்டூரன்ஸ் என்ற விண்கலத்தில் பயணிக்கின்றனர்...

இவர்களது முயற்சி வெல்கிறதா... தேடலின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

திரையில் நவம்பர் மாதம்:

திரையில் நவம்பர் மாதம்:

கனடாவின் பனிப் பிரதேசமான அல்பெர்ட்டா மற்றும், லாஸ் ஏஞ்சலெஸ் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்தியாவில் (நாளை நவம்பர் 7) இப்படம் திரைக்கு வரவுள்ளது

மிரட்டும் டிரெய்லர்:

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. படம் பார்ப்பவர்களை அந்தக் கதையுடனேயே முழு அளவில் கலக்க வைத்து, சம்பவங்களை நாம் நேரில் அனுபவிப்பது மாதிரி உணர வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் கிறிஸ்டோபர் நோலன். 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தின் ட்ரெயிலரே மிரட்டலாக இருக்கிறது. இந்த ட்ரெய்லர் ரிலீஸை அடுத்து இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு உலகெங்கும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Interstellar is a movie by Director, Christopher Nolan (Inception, The Dark Knight Trilogy). In the future, governments and economies across the globe have collapsed, food is scarce, NASA is no more, and the 20th Century is to blame. A mysterious rip in spacetime opens and it's up to whatever is left of NASA to explore and offer up hope for mankind. Interstellar chronicles the adventures of a group of explorers who make use of a newly discovered wormhole to surpass the limitations on human space travel and conquer the vast distances involved in an interstellar voyage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more