Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு தேர்தல்கள்

தேர்தல் 2026

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான முழு விவரங்கள்:

தமிழகம்: ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தற்போதைய நிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது.

கள நிலவரம்: 2021 தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் வென்றன. இந்த முறை திமுக, அதிமுக கூட்டணிகளுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.


புதுச்சேரி: ஏப்ரல் 9-ல் தேர்தல்

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக அடங்கிய யுபிஏ (UPA) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.



கேரளா மற்றும் அசாம்: ஏப்ரல் 9-ல் வாக்குப்பதிவு

கேரளா: 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே இங்கு வழக்கம் போலக் கடும் போட்டி நிலவுகிறது.

அசாம்: வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.


மேற்கு வங்கம்: இரண்டு கட்டங்களாகத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது:

முதல் கட்டம்: ஏப்ரல் 23

இரண்டாம் கட்டம்: ஏப்ரல் 29

இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை: அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4, 2026 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வரவிருக்கும் தேர்தல்கள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள்

ஓட்டுப்பதிவு: Thu, 9th Apr
ஓட்டு எண்ணிக்கை: Mon, 4th May
சட்டமன்றத் தொகுதிகள்: 30
நாடாளுமன்றத் தொகுதிகள்: 1
ஆளுங்கட்சி: All India NR Congress (AINRC)
முதல்வர்: N ரங்கசாமி

புதுச்சேரி வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்கள்

ஓட்டுப்பதிவு: Thu, 23rd Apr
ஓட்டு எண்ணிக்கை: Mon, 4th May
சட்டமன்றத் தொகுதிகள்: 234
நாடாளுமன்றத் தொகுதிகள்: 39
முதல்வர்: மு. க. ஸ்டாலின்

தமிழ்நாடு வேட்பாளர் பட்டியல்

2024 நாடாளுமன்ற தேர்தல்

Total Number of seats 543 | Majority 272

என்டிஏ கூட்டணி 293
INDIA 234
மற்றவர்கள் 16
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+