ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கும்பிடு.. மீசை வைத்த நபர் முத்துராமலிங்க தேவரா? புகைப்படம் உண்மையா? Fact Check
சென்னை: சுதந்திர போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரை போற்றி பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அத்துடன் அவர் குருஜி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வாக்கரை சந்தித்து வணங்கியதாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம்.
முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட காலங்களிலும் அதன் பிறகும் தென் தமிழக மக்களிடையே பெரும் செல்வாக்குடன் வளம் வந்தவர். தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் அவரை தனிப்பெரும் தலைவராக நூற்றாண்டுகள் கடந்தும் போற்றி புகழ்ந்து விழா எடுத்து வருகிறார்கள்.
இந்த சூழலில் முத்துராமலிங்க தேவர் மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கரை சந்தித்ததாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

எச்.ராஜா வெளியிட்ட படம்
ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எச்.ராஜா இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் அவர் வெளியிட்ட புகைப்படம் இன்று வரை பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தில் கோல்வாக்கர் மாலை அணிவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு நபர் கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார். அவரை முத்துராமலிங்க தேவர் என்று கூறி வருகின்றனர். அது தவறான தகவல் என்று பேஸ்புக்கிலேயே உண்மை கண்டறியும் செய்தி தளங்கள் ஸ்ட்ரைக் கொடுத்துள்ளன.

மறுப்புகள்
மறுபக்கம் இது தவறான தகவல் என்றும், அதில் இருப்பது முத்துராமலிங்க தேவர் இல்லை என்றும் அவர் சார்ந்த சமூக மக்களும், எழுத்தாளர்களும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த உண்மை தன்மையை அறியும் முயற்சியில் நாம் ஈடுபட்டோம். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பழைய பதிவு கிடைத்தது.

ஆர்.எஸ்.எஸ் பதிவு
அதில், கடந்த 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோல்வாக்கர் மதுரைக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விழாவின் படங்களோ, கலந்துகொண்ட தலைவர்களின் விபரங்களோ குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், முத்துராமலிங்க தேவர் தலைமறைவாக இருந்தார் என்றும் 1951 ஆம் ஆண்டே நாடு திரும்பினார் எனவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமறைவான தேவர்
1949 ஆம் ஆண்டு கொல்கத்தா சென்று அங்கிருந்து முத்துராமலிங்க தேவர் சீனா சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அவர் கோல்வாக்கரை சந்தித்து இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சிலர் 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கோல்வாக்கர் பிறந்தநாள் விழாவில் முத்துராமலிங்க தேவர் கலந்துகொண்டதாக தகவல் வெளியிடுவதையும் பார்க்க முடிந்தது.

தேவர் மலர் மறுப்பு
இதற்கு முத்துராமலிங்க தேவர் குறித்து பல்வேறு அறிய வரலாற்று தகவல்களை வெளியிட்டு வரும் தேவர் மலர் இதழ் விரிவான விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் "தேவரவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கரை சந்திக்கவே இல்லை" என்ற தலைப்புடன் வந்த செய்தியில் புகைப்பட ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேவரின் பாஸ்போர்ட்
அதில், 1955 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் பாஸ்போர்டில் உள்ள புகைப்படத்தில் மீசை இல்லாமல் நீளமான தலைமுடியுடனும் இருக்கிறார். ஆனால், பாஜகவினர் வெளியிட்ட படத்தில் இருக்கும் நபருக்கு மீசை இருப்பதுடன் நீளமான முடி இல்லை. இதனை அடிப்படையாக கொண்டு அந்த தகவலை மறுத்துள்ளது.

நவமணி மறுப்பு
முத்துராமலிங்க தேவரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று தகவல்களை திரட்டி வைத்து இருக்கும் நவமணி என்பவர், "1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்றதாக சொல்லப்படும் கோல்வாக்கர் பிறந்தநாள் விழாவில் முத்துராமலிங்க தேவர் பங்கேற்கவே இல்லை. இதுபோன்ற தகவலை புறந்தள்ள வேண்டும்" என்று கூறியதாக அதே இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பர்மா பயணம்
1949 ஆம் ஆண்டு தலைமறைவாகி 1951 ஆம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பும்போது முத்துராமலிங்க தேவர் தன்னுடைய மீசை முழுவதையும் மழித்து நீள தலைமுடியுடன் திரும்பியதாக தேவர் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1955 - 1956 ஆம் ஆண்டுகளில் முத்துராமலிங்க தேவர் பர்மா சென்ற படங்களில் அவர் மீசை இல்லாமல், நீள தலைமுடியுடன் இருக்கும் படங்களையும் தேவர் மலர் ஆதாரமாக காட்டியுள்ளது.

அருப்புக்கோட்டை தேர்தல் வெற்றி
ர்மாவுக்கு முத்துராமலிங்க தேவர் சென்ற சமயத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்றிலும் அவர் மீசை இல்லாமல் இருப்பதைக் காணலாம். அதேபோல், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற அருப்புக்கோட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெற்றிவிழாவில் தேவர் கலந்துகொண்ட படத்திலும் அவர் மீசை இன்றியே காணப்படுகிறார்.

ஒரு படம்.. இருவேறு ஆண்டுகள்
1949 ஆம் ஆண்டு மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் கோல்வாக்கர் மதுரை வந்ததாகவும் அப்போது முத்துராமலிங்க தேவரை சந்தித்ததாகவும் இருவேறு ஆண்டுகளை பதிவிட்டு ஒரே புகைப்படம் பகிரப்படுகிறது. நாம் மேலே சொன்னதைபோல் 1949 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் தலைமறைவானதால் அப்போது சந்திப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

Fact Check
வெளியான செய்தி
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கருக்கு முத்துராமலிங்க தேவர் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு
முடிவு
சந்திப்பு நடந்த ஆண்டு மற்றும் படத்தில் இருக்கும் தேவரின் தோற்றம் வரலாற்றுடன் ஒத்துபோகவில்லை.
ரேட்டிங்
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications