கேட்பரி சாக்லேட்களில் மாட்டிறைச்சி சேர்க்கப்படுவதாக பரவும் வதந்தி.. இதோ விளக்கம்!
சென்னை: கேட்பரி சாக்லேட்டுகளில் மாட்டிறைச்சி இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளத்தின் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஜெலட்டின் ஒரு மூலப்பொருளாக இருந்தால், அது மாட்டிறைச்சியிலிருந்து பெறப்பட்டதாகும் என்று அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'' தயவுசெய்து கவனிக்கவும், எங்கள் தயாரிப்புகளில் ஏதேனும் பொருட்களில் ஜெலட்டின் இருந்தால், நாங்கள் பயன்படுத்தும் ஜெலட்டின் ஹலால் சான்றிதழ் மற்றும் மாட்டிறைச்சியில் இருந்து பெறப்பட்டது," என்று கேட்பரி தெரிவிப்பதை போல இந்த வைரல் ஸ்க்ரீஷன் ஷாட் பரவி வருகிறது.
இதையடுத்து, வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும், இந்திய மக்கள் கேட்பரி தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்தியாவில் விற்கப்படும் கேட்பரி தயாரிப்புகளில் மாட்டிறைச்சி இருப்பதாகக் கூறி பலர் இந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், ஸ்கிரீன் ஷாட் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தங்கள் தயாரிப்புகளுடன் தொடர்புடையது அல்ல என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில், மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சி சார்ந்த பொருட்களும் விற்பனை செய்வது இல்லை என்றும், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து பொருட்களும் 100% சைவம். சாக்லேட்டின் ரேப்பரில் பச்சை புள்ளி வைக்கப்பட்டிருப்பது, சைவம் என்பதை குறிக்கிறது, " என்று கேட்பரி விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கூறப்படுவது: இந்தியாவில் விற்கப்படும் கேட்பரி சாக்லேட்டுகளில் மாட்டிறைச்சி உள்ளது.
முடிவு
முடிவு: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்கள் 100% சைவம்
ரேட்டிங்
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications