For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரு நாளைக்கு 4 முறை டிரஸ் மாத்துகிறார்.. ஏழை தாயின் மகனா?".. பிரதமர் குறித்து பரவும் பொய் தகவல்

மோடி உடைகள் குறித்த போலியான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "இதுவா ஏழ்மை? இவரா ஏழை தாயின் மகன்? ஒரே நாளில் 4 முறை டிரஸ் மாத்துகிறார் பிரதமர் மோடி" என்ற பொய்யான ஒரு செய்தி இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள், அறிவிப்புகள், திட்டங்கள், பேச்சுகள் போன்றவை இந்திய அரசியலில் தினந்தோறும் அலசப்பட்டு வரும் செய்தி.

அதேசமயம் எந்த அளவுக்கு பிரதமர் மோடியின் அரசு செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அவர் அணியும் டிரஸ், கண்ணாடி, ஹேர்-ஸ்டைல் போன்றவைகளும் பேசுபொருளாகி வரும்..

சர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடிசர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி

டிரஸ்

டிரஸ்

காரணம், உலகளவில் அதிகம் உற்று நோக்கப்படும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்... அப்படித்தான், 4 நாட்களுக்கு முன்புகூட ஒருவர், மோடியை தாடி எடுக்க சொல்லி 100 ரூபாய் அனுப்பி வைத்த செய்தியும் வைரலானது.. அந்த வகையில் இப்போதும் ஒரு செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது..

 வைரல் செய்தி

வைரல் செய்தி

பிரதமர் மோடி ஒரே நாளில் பல்வேறு தலைவர்களை சந்திக்க 4 முறை டிரஸ் மாற்றுகிறாராம்.. இந்த தகவலுடன், ஏராளமான அதுசம்பந்தமான போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த பதிவுகளில் பிரதமர் மோடி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மணிப்பூர் ஆளுநர் நஜிமா ஹெப்துல்லா, அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசும்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அதில் பதிவாகி உள்ளன..

 போட்டோக்கள்

போட்டோக்கள்

இந்த பதிவில், "இது எந்த மாதிரியான ஏழ்மை? ஒரே நாளில் பல்வேறு தலைவர்களை சந்திக்க 4 முறை உடை மாற்றி இருக்கிறார்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.. இந்த வரிகளும், போட்டோக்களும், சோஷியல் மீடியாவில் பரபரப்பாகவும் ஷேர் ஆகின.. இதையடுத்து, இந்த போட்டோக்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது.. அப்போதுதான் இந்த போட்டோக்கள் எல்லாமே போலியானவை என்பதும், அதனுடன் வலம்வரும் தகவலில் கொஞ்சம்கூட உண்மையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சந்திப்பு

சந்திப்பு

உண்மையை சொல்லப்போனால், பிரதமர் மோடி வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்கவே இல்லை.. வேறு வேறு தேதிகளில், அதாவது, ஜுன் 2 முதல் ஜுன் 11 வரையிலான நாட்களில் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன... இந்த தகவல்களும் அந்தந்த நாட்களில் வெளியாகி உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளைக்கு 4 டிரஸ் மாற்றுவதாக செய்தி.

முடிவு

பிரதமர் மோடியின் நான்கு வெவ்வேறு சந்திப்புகளின் படங்களை ஒரே நாள் நடந்தது போல போலியாக உருவாக்கியுள்ளனர்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Netizens falsely claim PM Modi changed dress four times a day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X