தங்கத்தை குத்தகைக்கு விட்டு வருடம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கலாம்.. தங்க நகை வாடகை வர்த்தகத்தின் பயன்கள்
சென்னை: தங்கத்தை ஏழை எளிய மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது.. எனினும் தங்கத்தை வாங்குவோரின் எண்ணிக்கை குறையாமலேயே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தங்கத்தை அடகு வைக்காமல்,அதற்கு பதிலாக வாடகைக்கு விட்டே சம்பாதிக்கும் புதிய முறை பிரபலமாகி வருகிறது.
சமீபத்தில் BBT Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "செம்பு, பித்தளை, இரும்பு போன்ற பல பொருட்கள் அன்றாய வாழ்க்கைக்கு பல வகைகளில் தேவைப்படுகிறது.. ஆனால், இந்த தங்கம் எதுக்குமே பிரயோஜனம் இல்லாத உலோகம்..

தங்கத்தின் மதிப்பு
நகையை தவிர வேறு என்ன தங்கத்தில் என்ன செய்ய முடியும்? அன்றாட வாழ்க்கையில் தங்கத்தின் தேவை என்ன? எல்லா வகைகளிலும் பயன்படக்கூடிய இரும்பு, குப்பையில் போடுகிறார்கள்.. ஆனால், ஒன்றுக்குமே உபயோகப்படாத தங்கத்தை பூட்டி வைத்து கொள்கிறார்கள்.. இதுதான் மனிதன்.. எதை பூட்டி வைக்க வேண்டும், எதை தூற்ற வேண்டும் என்று மனிதனுக்கு தெரிவதில்லை" என்று கூறியிருந்தார்.
அந்தவகையில், தங்க நகைகளை பாடுபட்டு வாங்கினாலும், பண்டிகை, விழாக்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தும் நிலைமை உள்ளது.. இல்லாவிட்டால் பீரோவிலேயே பூட்டி வைத்துவிடுவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.
தங்கத்தை குத்தகைக்கு விடுவது
ஆனால், இப்படி பீரோவிலும் பூட்டி வைத்து கொள்ளாமல், அவசரத்துக்கு சேமித்து வைக்கப்படும் சொத்தாக இல்லாமல், அந்த தங்கத்தை பயன்பாட்டிலும் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
ஆம், பயன்படுத்தப்படாத தங்கத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் அதன் உரிமையை தக்க வைத்துக் கொண்டே வருமானத்தையும் ஈட்டலாம்.. உலகம் முழுவதுமே அசாதாரண பொருளாதார சூழ்நிலை நிலவுவதால், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், முதலீட்டாளர்களும், நிறுவன உரிமையாளர்களும் தாங்கள் பயன்படுத்தாத தங்கத்தை வாடகைக்கு விடும் முறையை கையில் எடுத்துள்ளார்களாம்..
எப்படி வாடகைக்கு விடுவது?
நீங்கள் உங்களது உபரி தங்கத்தை ஒரு நகைக்கடைக்காரருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது 6 மாதத்துக்கு பயன்படுத்த தருகிறீர்கள் என்றால்,
அந்த நகைக்கடைக்காரர் தங்கத்தை வைத்து புதிய நகைகளைச் செய்து விற்பார்.. பதிலுக்கு, அந்த 6 மாதங்கள் முடிந்ததுமே, அவர் உங்களுக்கு கொடுத்த அதே அளவு தங்கத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்துவார்.
வீட்டில் பீரோவில் சும்மா கிடக்கும் தங்கத்துக்கு, வருமானம் கிடைப்பதே இந்த திட்டத்தின் லாபமாகும். இந்த வருமானத்தை ரொக்கமாகவோ, தங்கமாகவோ அல்லது வட்டியாகவோ பெறலாம்...
வாடகைக்கு தங்கம்
சுருக்கமாக சொன்னால், தங்கத்தைக் கொடுத்து, வட்டிக்குத் தங்கமாகவே திரும்பப் பெறும் நடைமுறைக்கு தங்கத்தை குத்தகைக்கு விடுவதாகும். தங்கத்தை விற்காமலேயே ஆண்டுக்கு 6-7% வரையில் வருமானம் பெறலாம் என்பதால், இந்த முறைக்கு, சமீப காலமாகவே பல்வேறு தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதுமட்டுமல்ல, தங்க குத்தகை என்பது பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், அது காப்பீட்டுடன், சட்டப்படி பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதன் லாபம் முழுவதும் உங்களுக்கே கிடைக்கும். தங்கம் முழுவதும் உங்கள் பெயரிலேயே இருக்கும்.. தங்களது நகையை விற்காமல் நீண்ட காலத்திற்கு தங்கத்தை வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இந்த புதிய முறை, ஒரு பெஸ்ட் சாய்ஸ் எனலாம்.
தங்க குத்தகை
உலகளவில் தங்க குத்தகை சில முக்கிய தளங்களில் நடந்து வருகிறது.. குறிபிபாக, லண்டனின் ஓடிசி (OTC) சந்தை, எல்பிஎம்ஏ (LBMA), அமெரிக்காவின் காமெக்ஸ் (COMEX) போன்ற தங்களில் தங்க குத்தகை நடக்கின்றன. இது நம்முடைய நாட்டுக்கும் எட்டிவிட்டது..
இந்தியாவில் நாட்டில் சமீபத்திய மாதங்களில் குத்தகை விகிதங்கள் 2-3 சதவீதத்திலிருந்து 6-7 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தின் மதிப்பு பொறுத்து, ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். வெறும் 10 கிராம் தங்கம் வைத்திருப்பவர்கள் கூட தங்க குத்தகையில் வருமானம் ஈட்ட முடியும்.
நம்பகத்தன்மை அவசியம்
இப்படி அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து கொள்வது அவசியமாகும்..
குத்தகை காலத்தில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயருமானால், அந்த உயர்வுக்கு ஏற்றவாறு உங்களால் வருமானம் ஈட்ட முடியாமலும் போகலாம். எனினும், தங்கத்தை அடகு வைக்காமல், வாடகைக்கு விடுவதால் நல்ல வருமானம் கிடைப்பது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications