விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் - பட்ஜெட்டில் ஜேட்லி தகவல்
விவசாயிகளின் வருவாய் வரும் 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்
Recommended Video

டெல்லி: விவசாயிகளின் நலனில் அக்கறைக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்
2018-2019ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்காக பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், வரும் ஆண்டில் விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு என்று சுமார் 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வேளாண்மை வருவாயை பெருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், வரும் 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காகும் என்றும் உறுதியளித்தார்.
உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகிலேயே இத்தனை கோடி பேருக்கு நேரடி மானியம் வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார். விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் வருவாயும் உயரும் என்றும் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications