இது அப்பட்டம்.. மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலால் கொதித்த ஸ்டாலின்..ஜெய்சங்கருக்கு கடிதம்
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இன்று இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர்.
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இன்று இலங்கை கடற்டையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 6 மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறி தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகளை வெட்டி வீசும் அட்டூழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடனே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பயம் இருந்தாலும் கூட வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர்.

மீனவர்கள் மீது தாக்குதல்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த வேளையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

மீனவர்களுக்கு சிகிச்சை
இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள். என்ஜின் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கடிதம்
இந்நிலையில் தான் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‛‛அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறுகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றனர். இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது.

கடிதத்தில் இருப்பது என்ன?
நமது மீனவர்கள் வாழ்வாதராத்துக்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதர வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications