வேலைதேடும் இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்..! இந்த ஆண்டு மட்டும் 8000 பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களிலிருந்து இந்த ஆண்டு மொத்தம் 8000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்று அமேசான். அமெரிக்கா, கனடா என உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான் தான் டாப்.

ஆனால் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் அமேசானுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

8000 வேலைவாய்ப்புகள்

8000 வேலைவாய்ப்புகள்

இந்நிலையில், இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களிலிருந்து மொத்தம் 8000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமேசான் நிறுவனத்தின் HR பிரிவு தலைவர் தீப்தி வர்மா கூறுகையில், "பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், கோயம்புத்தூர், புனே உட்பட நாட்டின் 35 நகரங்களில் நேரடியாக 8000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம். ஐடி, கஸ்டமர் கேர், நிதி, சட்டம் உள்ளிட்ட பணியிடங்களில் ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

20 லட்சம் பேருக்கு வேலை

20 லட்சம் பேருக்கு வேலை

வரும் 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். ஏற்கனவே இந்தியாவில் நாங்கள் இதுவரை 10 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் நாட்டில் பெருந்தொற்றால் பலரும் வேலையை இழந்து வந்த சூழலிலும்கூட 3 லட்சம் பேருக்கு நாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்தோம்" என்றார்

செப் 16இல் வேலைவாய்ப்பு முகாம்

செப் 16இல் வேலைவாய்ப்பு முகாம்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் சீராக வளர்ந்து வருகிறது. வரும் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்த அமேசான் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அமேசான் தனது முதல் வேலைவாய்ப்பு முகாமை இந்தியாவில் நடத்துகிறது. முற்றிலும் காணொலி மூலம் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், 21ஆம் நூற்றாண்டில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் தீப்தி வர்மா குறிப்பிட்டார்.

இது தொடக்கம் தான்

இது தொடக்கம் தான்

மேலும் செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் குறித்த பயிற்சியும் அளிக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் அமேசான் நிறுவனத்திற்கு 2ஆவது பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா இருப்பதாகத் தெரிவித்த தீப்தி வர்மா, அமேசானில் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடக்கம் தான் என்றும் வரும் காலங்களில் இன்னும் அதிக நபர்களை பணியமர்த்த அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் தீப்தி வர்மா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+