மாத ஊதியம் ரூ.55 ஆயிரம்.. சென்னையிலேயே மத்திய அரசு பணி.. நாளை கடைசிநாள்.. விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெல் நிறுவனத்தின் சென்னை கிளையில் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited or BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் கிளை சென்னையில் அமைந்துள்ளது. இந்த சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கிளையில் காலியாக உள்ளன பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னையில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (Electronics) பிரிவில் 7 பணியிடங்கள், ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (Mechanical) பிரிவில் 5 பணியிடங்கள், டிரெய்னி என்ஜினீயர் I (Electronics) பிரிவில் 12 பணியிடங்கள், டிரெய்னி என்ஜினீயர் I (Mechanical) பிரிவில் 6 பணியிடங்கள், டிரெய்னி என்ஜினீயர் I (Computer Science) பிரிவில் 3 பணியிடங்கள், டிரெய்னி என்ஜினீயர் I (Civil) 01 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினீயரிங் கல்லூரியில் முழு நேரமாக பிஇ, பிடெக் படிப்பை சம்பந்தப்பட்ட பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியமாகும். என்ஜினீயரிங் தவிர்த்து பிஎஸ்சி பட்டப்படிப்பில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?
டிரெய்னி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 01.08.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

மாத ஊதியம் எவ்வளவு?
இது ஒப்பந்த பணி என்பதால் டிரெய்னி பணியிடத்துக்கு முதல் ஆண்டில் ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டில் ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டில் ரூ.40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியை பொறுத்தமட்டில் முதல் ஆண்டு ரூ.40,000, 2வது ஆண்டு ரூ.45,000 மற்றும் 3வது ஆண்டு ரூ.50,000, 4வது ஆண்டு ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை எப்படி?
எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியை பொறுத்தமட்டில் 3 ஆண்டு ஒப்பந்த பணி வழங்கப்படும். தேவையெனில் 4வது ஆண்டு தொடரப்படும். டிரெய்னி என்ஜினீயர் பணி என்பது 2 ஆண்டு ஒப்பந்த பணி. தேவையெனில் கூடுதலாக ஒரு ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நாளை (அக்டோபர் 27)ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். www.bel-india.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். வேண்டும். பொது, பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள், ஓபிசி பிரிவினர் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு ரூ.472, டிரெய்னி பணிக்கு ரூ.177ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications