IT Jobs: டிகிரி முடித்தவரா? நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 16) நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்ள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து Freshers Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். அதேபோல் பட்ட மேற்படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை 2024, 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அதேபோல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை 2026ல் முடிப்பவர்களும் விண்பண்பம் செய்யலாம்.
என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட் இருந்தால் அதன்படி பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை (மார்ச் 16) மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ இடம்
இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Sholinganallur செல்ல வேண்டும். அங்கு No.602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam, High Road, Sholinganallur - 600 119) என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெறும். லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications