IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 11 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட இடங்களில் இண்டர்வியூ நடைபெற உள்ள நிலையில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று பலன் பெறலாம்.
நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸில் இருந்து அவ்வப்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 11 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், புனேவில் உள்ள நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். எந்தெந்த பிரிவுகள்?, யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
பைத்தான் டெவலப்பர்
* சென்னை மற்றும் புனே நிறுவனத்தில் ETL Testing பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தப்பட்சம் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் வேண்டும்.
* அதேபோல் சென்னை, பெங்களூரில் பணியாற்ற பிக் டேட்டா டெவலப்பர் (Big Data Developer) ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கும் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் வேண்டும்.
* சென்னை, புனே, பெங்களூருவுக்கு பைத்தான் டெவலப்பர் (Python Developers) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கும் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் வேண்டும்.
பைஸ்பார்க் பிரிவில் வேலை
* அடுத்ததாக Pyspark பிரிவில் சென்னையயில் பணியாற்ற ஆட்கள் தேவையாக உள்ளது. இதற்கு 4 + ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் சென்னையில் Ab Initio பிரிவில் 4+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* சென்னையில் Spark/Scala பிரிவில் பணியாற்ற 4+ ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* சென்னை, பெங்களூர், புவேில் டேட்டாடேஜ் டெவலப்பர் பிரிவல் பணியாற்ற 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அசூர் டேட்டா இன்ஜினியர்
* சென்னை, பெங்களூர், புனேவில் ஏடபிள்யூஎஸ் டேட்டா இன்ஜினியர் பணிக்கு 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* சென்னை, புனேவில் Azure Data Engineer பணிக்கு 5+ ஆண்டுகள் பணியாற்றியவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* பெங்களூரில் Talend Developer பிரிவில் காலியிடங்கள் உள்ளது. இதற்கு 5 - 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மார்ச் 14ல் இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு பணிகளுக்கும் சம்பளம் வேறுபடும் என்பதால் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இண்டர்வியூவின்போது பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிகளுக்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி சென்னை, புனே, பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை இண்டர்வியூ இடம்
இதற்கான இண்டர்வியூ சென்னை என்றால் Tata Consultancy Services Ltd No 415/21-24 Kumaran Nagar, old Mahabalipuram Road (OMR), Sholinganallur Chennai -600119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பெங்களூர் - புனே முகவரி
பெங்களூர் என்றால் Tata Consultancy Services Ltd- Tata Consultancy Services Ltd, Think Campus 42, 45-P, Hosur Rd, Phase 2, Bengaluru - 560100 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெறும். புனே என்றால் A1 building, TCS, Sahyadri Park 1, Plot No. 5, MIDC SEZ, Rajiv Gandhi Infotech Park, Hinjewadi, Phase-III, Pune - 411057, Maharashtra, என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இந்த இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்பண்பம் செய்ய வேண்டும். அதன்பிறக அப்டேட்டட் ரெஸ்யூம், TCS iBegin அப்ளிகேஷன் பார்மின் பிரிண்ட்அவுட், ஆதார் அல்லது பார்ன் கார்டின் ஜெராக்ஸ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications