Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஸ்டம்ஸ் ஆபிஸில் வேலை.. மாதம் 57 ஆயிரம் சம்பளம்.. 10ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுங்கத்துறை எனப்படும் கஸ்டம்ஸ் ஆபிசில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 18 ஆயிரம் முதல் 57 ஆயிரம் வரை வழங்கப்படும்.

சுங்கத்துறை எனப்படும் கஸ்டம்ஸ் அலுவலகங்கள் மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுங்கவரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது கஸ்டம்ஸ் அலுவலர்களின் முக்கியமான பணியாகும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன.

job chennai employment

பணியிடங்கள் விவரம்:

இந்த நிலையில்தான் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மண்டல சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேன்டீன் உதவியாளர் - 22 பணியிடங்கள்

கல்வித் தகுதி

கல்வித் தகுதியை பொறுத்தவரை இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு:

வயது வரம்பினை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்கள் முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்
ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: +10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: +15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: +13 ஆண்டுகள்

சம்பளம் எவ்வளவு:

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் கமிஷன் படி Level 1 - Rs.18,000 முதல் Rs.56,900 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல்களை சுய சான்றொப்பம் இட்டு தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப உறையில் "APPLICATION FOR THE POST OF CANTEEN ATTENDANT" என குறிப்பிடுவது அவசியம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Assistant Commissioner of Customs (Personnel & Establishment Section),
2nd Floor, New Custom House,
Ballard Estate,
Mumbai - 400001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.mumbaicustomszone1.gov.in/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+