ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை! அழைக்கும் இந்திய அணுசக்தி துறை! விண்ணப்ப தேதி முடிய போகுது
டெல்லி: இந்திய அணுசக்தி துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூன் 14 கடைசிநாளாகும்.
இந்திய அணுசக்தி துறையில் காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையமானது மத்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு உள்ளது. அதன்படி மொத்தம் 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ரூ.44,900 சம்பளம்
Scientific Assistance சி பிரிவில் ஆட்டோமொபைல் என்ஜினியர், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல், கெஸ்ட் ஹவுஸ் சூப்பர்வைசர் ஒருவர் என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.44,900 மற்றும் இதர சலுகைகள் கிடைக்கும். Scietific Assistance பி பிரிவில் பயோலாஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், தோட்டக்கலை, சிவில், விலங்கியல், விலங்கிய்,/பயோடெக்னாலஜி, லைப் சயின்ஸ் மைக்ரோபயோலஜி/பயோகெமிஸ்ரி என மொத்தம்24 இடங்கள் நிரப்பபபட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.35,400 மற்றும் பிற சலுகைகள் உண்டு.

டெக்னீசியன் பிரிவு பணி
மேலும் டெக்னீசியன் சி பிரிவில் வயர்மேன், கம்ப்யூட்டர் நெட்வொர்க், மில்ரைட், டிராப்ட்மேன் (எலக்ட்ரிக்கல்)., எலக்ட்ரிக்கல் என மொத்தம் 8 பணியிடங்களுக்க ரூ.25 ஆயிரத்து 500 உடன் பிற சலுகைகள் கிடைக்கும். இதுதவிர டெக்னீசியன் பி பிரிவில் பிட்டர், ஆப்டிக்கல் சயின்ஸ், பிசியோதெரபி, கிளாஸ் ப்ளோவிங், கார்பென்டர் என மொத்தம் 12 பணிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 700 சம்பளத்துடன் பிற சலுகைகள் உண்டு. எழுத்து தேர்வு மற்றும் திறன் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

கல்வி தகுதி என்ன?
இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. டிப்ளமோ, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவின் சான்றித் வைத்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 14.06.2022ன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
www.rrcat.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 14 கடைசிநாளாகும். கூடுதல் விபரங்களை https://www.rrcat.gov.in/hrd/Openings/2022/rrcat_2_2022_dtl_eng.pdf பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய https://www.rrcat.gov.in/hrd/Openings/Current_Openings.html கிளிக் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications