Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவலர் தேர்வு: ரிசல்ட் வந்தாச்சு.. எத்தனை பேர் தேர்வு தெரியுமா? அடுத்து என்ன செய்யனும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் நேற்று இதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. காவலர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது.

மொத்தம் 18,689 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் இனி உடல் அளவீடு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

tamil-nadu-police-constable-exam-results-announced-18-689-candidates-shortlisted-for-next-stage

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆம் நிலை காவலர் பணியிடங்கள் 2,833 மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் 180 காலிப்பணியிடங்களும் தீ அணைப்பு துறையில் 631 தீ அணைப்பாளர் பணியிடங்களும் என மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது.

இதற்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள 2, 24,500 ஆண், பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் பெரும்பாலானோர் தேர்வு எழுதிய நிலையில், கடந்த ஒரு மாதமாக தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

18,689 பேர் தேர்ச்சி

எப்படியவது காவலர் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்வு எழுதிய சுமார் 2 லட்சம் தேர்வர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில்தான் தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காவலர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது.

மொத்தம் 18,689 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் இனி உடல் அளவீடு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதாவது, தேர்வர்களுக்கு அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ள எடை, உயரம் உள்ளிட்டவை உள்ளதா என சரிபார்க்கப்படும். அதேபோல, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட உடல் தகுதி சோதனைகளும் நடைபெறும்.

உடல் தகுதி தேர்வு

மொத்தம் 3,644 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ள நிலையில், 1:5 என்ற அடிப்படையில் தற்போது ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பட்டியல் வெளியகியுள்ளது. இந்த பட்டியலில் தங்கள் பதிவு எண் இடம் பெற்றுள்ளவர்கள் அடுத்த கட்டமாக பிஎம்டி எனப்படும் உடல் அளவீட்டு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உயரம், chest measurements ஆகியவை சரிபார்க்கப்படும்.

இதில் தகுதி பெறுபவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு 24 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவு பெற்ற பிறகு இறுதிகட்ட தேர்வு பட்டியல் வெளியாகும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அப்டேட்டை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+