தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் வேலை.. 50,000 சம்பளம்.. 8 ஆம் வகுப்பு தகுதி தான்.. வேற லெவல் சான்ஸ்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது. உள்ளாட்சி தேர்தல்கள் உள்ளிட்டவற்றை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள 09 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்
* அலுவலக உதவியாளர்: 07
* டிரைவர்: 02
என மொத்தம் 09 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
* அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டர் இயந்திரங்கள் இயக்க தெரிந்து இருக்க வேண்டும்.
* டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன் படி உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம் மற்றும் ஆட்டோ மெக்கானிசம் & முதலுதவி அனுபவம் பெற்றுள்ளதற்கான சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொதுப்பிரிவினர் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 18 முதல் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வயது உச்ச வரம்பு இல்லை.
சம்பளம் எவ்வளவு:
* அலுவலக உதவியாளர்: ரூ.15,700 - 50,000 வரை
* டிரைவர்: ரூ.19,500 - 62,000 வரை
தேர்வு முறை:
தேர்வு முறையைப் பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை https://tnsec.tn.gov.in/index.php என்ற இணையதளத்தில் தேர்வர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 02.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை நிர்வாக அலுவலர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
அரும்பாக்கம், சென்னை-600 106.
நிபந்தனைகள்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://tnsec.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து களங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10 x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். அரசு விதிகளின் படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் விரைவஞ்சல் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். நியமன எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அல்லது எத்தகைய காரணமும் குறிப்பிடாமல் நியமனத்தை ரத்து செய்யவோ ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications