மாத ஊதியம் ரூ.19,000 முதல் ரூ.1.30 லட்சம்.. 1083 காலியிடங்களை நிரப்பும் டிஎன்பிஎஸ்சி.. புது அறிவிப்பு
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் டிராப்டிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் பணிகளுக்கான 1083 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தவும், ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புகளையும் டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா அலுவலர், நூலகர், மாவட்ட நூலக அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள்(Combined Engineering Subordinate Services) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (junior Draughting Officer), டிராப்ட்ஸ்மேன் (Draughtsman), போர்மேன் (Foreman) என மொத்தம் 1083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Overseer / Junior Draughting Officer பிரிவில் 794 பணியிடங்கள், Junior Draughting Officer ( Highway) பிரிவில் 236 பணியிடங்கள், Junior Draughting Officer (Public Works) பிரிவில் 18 பணியிடங்கள், Draughtsman (Grade - III) பிரிவில் 10 பணியிடங்கள், Foreman (Grade-II) பிரிவில் 25 பணியிடங்கள் என மொத்தம் 1083 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பம் செய்வோருக்கான வயது வரம்பு மாறுபடுகிறது. அதன்படி ஓவர்சீர்/ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் பணிக்கு 37 வயதுக்குள்ளும், பிற பணிகளுக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினரை பொறுத்தமட்டில் ஓவர்சீர்/ஜூனியர் டிராப்டிங் மற்றுமு் போர்மேன் பணிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாறாக ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (ஹைவே) பணிக்கு 35 வயதுக்குள்ளும், ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (பப்ளிக் வொர்க்), டிராப்ட்மேன் கிரேடு III பணிக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2023 தேதியின் படி கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் உள்ளன. மொத்தமாக பார்த்தால் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிப்ளமோ பிரிவில் சிவில், மெக்கானிக்கல், என்ஜினீயரிங் பிரிவில் சிவில், மெக்கானிக்கல் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதுபற்றிய விபரம் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

மாத சம்பளம் என்ன?
இதில் ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் மற்றும் டிராப்ட்மேன் பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.35,400 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும். போர்மேன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ.71,900 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.100 என மொத்தம் ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வானது 27.05.2023ம் தேதி நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
நாணயம் அச்சிடும் ஆலையில் வேலை.. 95,000 சம்பளம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அப்ளை பண்ண ரெடியா? -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications