இந்து சமய அறநிலையத் துறையில் மருத்துவ காலிப்பணியிடங்கள்.. சென்னையில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: சென்னை ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே காணலாம்.
சென்னை புரசைவாக்கம் அருகே வ,ஊ.சி. நகரில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தால் மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவ மையத்தில் பணிபுரிவதற்காக மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற 3 பதவிகளுக்கு ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் ஆட்களை நியமிக்க காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. அதாவது கடந்த 24-ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

கல்வித்தகுதி: 1. மருத்துவ அலுவலர் பணிக்கு MBBS படித்திருக்க வேண்டும். 2.செவிலியர் பணிக்கு DGNM முடித்திருக்க வேண்டும். 3. பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 1.7.2023 - ஆம் தேதியோடு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல் பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: மருத்துவ அலுவலர் பதவிக்கு மாதம் ரூ.90,000 சம்பளம் வழங்கப்படும். செவிலியர் பதவிக்கு மாதம் ரூ.14,000 சம்பளம் வழங்கப்படும். பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு 6,000
சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: சென்னை ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். போஸ்ட் மூலமாகவோ அல்லது நேரிலேயோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.07.2023 மாலை 5.45 மணிக்குள் வந்து சேரவேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: https://hrce.tn.gov.in/hrcehome/index.php- என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் சிவப்பு எழுத்தில் 'கந்தகோட்டம், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்-மருத்துவப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பு மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் தோன்றும் பக்கத்தில் வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரமும் இடம் பெற்றுள்ளது. அதில் விண்ணப்ப படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை
முழுமையாக பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களை இணைக்கவும். பிறகு கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று 24.07.2023ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,
ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்
எண்.44, இராசப்ப செட்டி தெரு, பூங்காநகர், சென்னை-3.
விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்யவும் மேலும் விவரங்களுக்கும் இந்த https://hrce.tn.gov.in/hrcehome/index.php லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications