ஈபிஎஸ் VS ஓபிஎஸ்.. அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? சிவசேனா தீர்ப்பிலும் ட்விஸ்ட்! இதுதான்
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
சென்னை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்னொரு அணியாகவும் செயல்பட்டனர். இரண்டும் தரப்பும் சிவசேனா கட்சிக்கு உரிமை கொண்டாடியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால் சிவசேனா கட்சி, சின்னத்தை உத்தவ் தாக்கரே இழந்துள்ளார். இதில் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இரண்டு அணிகளாக செயல்படும் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை கணித்துவிட முடியும். இதில் யார் கை ஓங்கி உள்ளது என்பது பற்றிய தகவல் வருமாறு:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி கடந்த ஆண்டு இரண்டாக உடைந்தது. கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்தார். சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணிதிரண்டு பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை கைப்பற்றினர். தற்போது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக உள்ளார்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என ஏக்நாத் ஷிண்டே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே அணியினர் கூறி வந்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினர். சிவசேனாவின் வில்அம்பு சின்னம் முடக்கப்பட்டது.

சிவசேனா விவகாரம்
மேலும் கட்சி, சின்னத்துக்காக உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினர். இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.அதோடு சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்குவதாக தெரிவித்தது.

2 அணியாக அதிமுக
இதுதான் தற்போது தமிழ்நாட்டில் அதிமுக அணியில் பேசும் பொருளாக உள்ளது. சிவசேனா போன்றே அதிமுகவும் இரண்டு அணிகளாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தரப்பில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி இடைக்கால நிவாரணமாக அதிமுக வேட்பாளர் பொதுக்குழுவால் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கி உள்ளது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படும் சூழலில் தான் சிவசனோ விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

எடப்பாடிக்கு சாதகம் என்ன?
சிவசேனா தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு என்பது சில முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதில் முதல் விஷயம் என்பது கட்சியில் அதிகப்படியாக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே அணியில் தான் அதிக எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளதால் கட்சியும், சின்னமும் அவர் வசம் சென்றது. அதனபடி பார்த்ததால் இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக உள்ளது.

ஓபிஎஸ்க்கு சாதகம் என்ன?
மற்றொரு அம்சம் என்னவென்றால் கட்சியின் விதிகளாகும். இதில் தான் தற்போது முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிவசேனா கட்சியின் பைலாவும், அதிமுகவின் பைலாவும் வெவ்வேறானவை. அதிமுகவை பொறுத்தமட்டில் கட்சி 2021ல் விதிகள் மாற்றம் செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவுக்கு பதில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன்படி ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே தான் கடந்த ஆண்டு கட்சியில் குழப்பம் ஏற்பட்டபோது கட்சி விதி மாற்றப்பட்டது. பொதுக்குழு மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக மாறிய நிலையில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அங்கீகரிக்காத தேர்தல் ஆணையம்
இதனை எதிர்த்து தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பொதுக்குழுவில் மாற்றப்பட்ட விதிகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அதன்படி பார்த்தால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. மேலும் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியால் தனியாக எந்த உரிமையும் கோர முடியாது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கும்?
இப்படியாக அதிமுக கட்சி விஷயத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என இருதரப்புக்கும் ஒவ்வொரு பாயிண்டுகள் சாதகமாக உள்ளன. இருப்பினும் கூட பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஈரோடு இடைத்தேர்தல் விஷயத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விஷயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் ஆணையம் புதிய விதிகளை பதிவேற்றம் செய்யவில்லை என தெரிவித்து இருந்தது. இதனால் தான் சிவசனோ விஷயத்தில் தேர்தல் ஆணையம் கூறிய உத்தரவு என்பது அதிமுகவை பொறுத்தமட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சார்ந்து இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications