குழாயில தண்ணி வரலையா.. மினரல் வாட்டர் வாங்கி குடிக்க சொல்லு.. வைரலாகும் மீம்ஸ்கள்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் இனி எம்எல்ஏவை கண்டா வரச்சொல்லுங்க,, கையோடு கூட்டிவாருங்க என்ற கதைதான் இருக்கும் என வைரல் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது. முன்னதாக தேர்தலில் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கூறி அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் கொடுத்த வாக்குறுதிகள் தலையே சுற்றிவிடும்.
பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று கவுண்டமணி சொல்வார். ஆனால் இங்கு ஏக்கர் கணக்கில் அல்ல. பல கிலோமீட்டருக்கு சொல்லப்பட்டது. இதெல்லாம் சாத்தியமா. இதெல்லாம் அடுக்குமா என்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை பார்த்து மக்கள் வாயடைத்து போனார்கள் என்பதுதான் உண்மை.

கையோடு கூட்டிவாருங்க
சட்டசபை தேர்தலின் போது ஓடோடி வந்து வாக்குகேட்ட வேட்பாளர்களை இனி அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் தேடி கண்டுபிடிக்க முடியும் என்று மீம்கள் பரவி வருகின்றன. பிரச்சனைகள் வந்தால் கண்டா வரச்சொல்லுங்க,, கையோடு கூட்டிவாருங்க என்ற கதைதான் இருக்கும் என்று சொல்கிறார் ட்விட்டர்வாசி ஒருவர்.

மினரல் வாட்டர்
இன்னொருவர் தனது ட்விட்டரில், தேர்தல் முடிந்த பின் அரசியல்வாதியிடம் பேசுவது போல் போட்டிடுகிறார். போனில் பேசும் அரசியல்வாதி குழாயில் தண்ணீர் வரலைன்னு சொல்றாங்களா? குழாயில தண்ணி வரலைன்னா.. மினரல் வாட்டர் வாங்கி குடிக்க சொல்லு. எலக்சென் முடிஞ்சிருச்சு மறந்திருச்சா? என்பதாக மீம்ஸ் உள்ளது.

விடுமுறை தின படம்
இன்னொரு மீம்ஸில், சென்னைவாசிகள் ஓட்டுப்போடவே போகாமல் வீட்டிலேயே இருந்ததை கிண்டல் செய்துள்ளார்கள். அதில் ஓட்டு போட லீவு விட்டவர்கள் விடுமுறை தின திரைப்படம் போடவில்லையே என்று கேட்பதாக உள்ளது.

நடக்காது
இன்னொரு மீம்ஸில் எப்படியாவது மாற்றத்தை கொண்டுவரணும் என்கிறார் முதல்தலைமுறை வாக்காளர். அதற்கு பலமுறை ஓட்டு போடும் நபர் எந்த மாற்றமும் நடக்காத ஏக்கத்தில்.. அடே சும்மா இருடா என்பதாக மீம்ஸ் உள்ளது.

ஓட்டு
இன்னொரு மீம்ஸில என்னங்கடா இது? யாரைபார்த்தாலும் ஜெர்மன்ல இருந்து வந்தேன்றாங்க. துபாய்ல இருந்து வந்தேன்றாங்க அப்ப இங்க இருக்குற எவனும் ஓட்டே போலையா என்று கவுண்டமனி செந்தில், வடிவேலுவிடம் கேட்பது போல் மீம்ஸ் உள்ளது. இன்னொருவர் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் எது என்கிறார். அதற்கு தமிழ்நாடு என்கிறார்.இப்படியாக பல மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது,