அய்யஹோ.. இது தெரியாம அஞ்சு எலுமிச்சை பழத்தை பத்து ரூபாய்க்கு வித்துட்டேனே!
சென்னை: வெயிலுக்கு இதமாக ஜூஸ் போட்டுக் குடிக்கலாம் என்றால், இப்படி எலுமிச்சை பழத்தின் விலை தாறுமாறாக எகிறிக் கிடக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் மக்கள்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி சொல்வது போல், 'நீதான் காரணம்.. இல்ல நீ தான் காரணம்..' என ஒவ்வொரு பொருள் விலை உயரும் போதும், தங்களது கவலைக்கு அதுதான் காரணம் என அதைப் பற்றி புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர் நெட்டிசன்கள். இப்போது அவர்கள் கையில் கிடைத்திருப்பது எலுமிச்சை பழம். சும்மா விடுவார்களா.. எலுமிச்சை பழத்தை மீம்ஸ்களில் ஜூஸ் போட்டு, ஊறுகாயாக தாளித்து வருகின்றனர்.

ஆப்பிளைவிட விலை அதிகமாகி விட்ட எலுமிச்சை பழம்தான் இப்போது டிரெண்டிங்கே. வாகனங்களில் திருஷ்டிக்கு கட்டப்படும் எலுமிச்சையைத் திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துக் கொண்டு போவதாக, டூமச்சாக எல்லாம் சிந்தித்திருக்கிறார்கள்.

எலுமிச்சை கையில் கிடைத்த குஷியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். இதோ அப்படியாக எலுமிச்சை விலை உயர்வு பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
