இப்படி ஆகிடுச்சே.. பக்கோடா வேலைக்கும் ஆப்பு வைத்த சென்செக்ஸ்.. அமித் ஷா ப்ரோ வேற வேலை இருக்கா?

சென்னை: பட்ஜெட் அறிவிப்பிற்கு பின் சென்செக்ஸ் புள்ளிகளில் இமாலய சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பல முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
காலையில் இருந்தே சென்செக்ஸ் சரிவுடன்தான் தொடங்கியது. தற்போது இது சிறு தொழில் செய்யும் பணியாளர்களையும் மறைமுகமாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாஜக தலைவர் அமித் ஷாவை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களின் பக்கோடா பேச்சை வைத்து இந்த கிண்டல் செய்யப்படுகிறது.

பக்கோடா கடை
சில நாள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி ''200 ரூபாய் வருமானம் கிடைக்கும்படி பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான்'' என்றார். இதே கருத்தை பாஜக தலைவர் அமித் ஷாவும் சொல்லி இருந்தார். இது பெரிய விவாதத்தை உருவாக்கி இருந்தது.
|
அதுவும் போச்சு
இதுகுறித்து இவர் ''எப்போது மோடி சென்செக்ஸ் வைத்து தன்னுடைய வெற்றியை தீர்மானிப்பார். இந்த முறை சென்செக்ஸ் குறைந்துள்ளது. சிறிய முதலீடு செய்து இருந்த சிறுநிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. எல்லோரும் பக்கோடா விற்க செல்ல வேண்டியதுதான்'' என்பது போல குறிப்பிட்டுள்ளார்.
|
காரணம்
இவர் ''ஒருவேளை அதிக சம்பளம் தரக்கூடிய பக்கோடா வியாபாரத்தை மார்கெட்ல சேர்த்துட்டாங்களா? இப்படி எல்லாம் சரியுது'' என்றுள்ளார்.
|
எல்லோரும் மாறிட்டாங்க
இவர் ''அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பின் எல்லோரும் பக்கோடா விற்க கிளம்பிவிட்டார்கள். அதனால் தற்போது பங்கு வர்த்தகம் சரிந்து விட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
பட்ஜெட்
இவர் ''பட்ஜெட் நாள் அன்று சென்செக்ஸ் மிகவும் அதிகமா குறைந்தது. 4.5 லட்சம் கோடி வரை இதனால் இழப்பு ஏற்பட்டது. இப்போது இன்னும் குறைந்துள்ளது. இது யூனியன் பட்ஜெட்டா இல்லை பக்கோடா பட்ஜெட்டா என்று புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!