எல்லா டெங்கு கொசுக்களை கூவத்தூரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினால் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க நெட்டிசன்கள் ஐடியா கொடுத்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டாலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து நெட்டிசன்கள் கலாய் ஐடியாக்களை கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில..

உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததும்

உள்ளாட்சி நிர்வாகம் இல்லாமல் போனதும் #டெங்கு காய்ச்சல் வளர்ச்சிக்கு காரணம்.. என்கிறது இந்த டிவிட்

கூவத்தூரில் பேச்சு வார்த்தை

பேசமா எல்லா டெங்கு கொசுக்களை கூவத்தூரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினால் டெங்கு காய்ச்சல் ஒழிக்க முடியும்.. என்கிறார் இந்த நெட்டிசன்

டெங்குவுக்கு செலவழிக்கலாம்

எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்திற்கு செலவிடும் பணத்தை டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த செலவழிக்கலாம்... என கூறுகிறார் இந்த வலைஞர்

வந்தால் தெரியும் கஷ்டம்

இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் இன்னும் வராமல் இருக்கு தமிழகத்தில் அவர்களுக்கு வந்தால் தெரியும் மக்கள் கஷ்டம்.. என்கிறது இந்த டிவிட்

ஆட்சியை கலைக்க வழி

நீங்க தான் ஆட்சியை கலைக்க வழி பண்ணல நானாவது பண்றனே என்கிறது டெங்கு காய்ச்சல்.. என்கிறார் இந்த நெட்டிசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dengue fever causes in Tamilnadu severely. Netizens gives fun ideas to control it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற