இந்த டைம்ல அன்னத்தில் கை வைப்பனே தவிர, யார் கன்னத்திலேலயும் கை வைக்க மாட்டேன்! நெட்டிசன்ஸ் ரகளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீண்டும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜீயர்- வீடியோ

  சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறக்கின்றன.

  ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கக்கோரி கடந்த மாதத் 17ஆம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் 2 நாட்கள் கடந்த நிலையில் பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜீயர்.

  இந்நிலையில் நேற்று மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜீயர் இன்றும் பாதியிலேயே உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்

  பசி எடுத்ததும்

  #ஜீயர் இருந்தது சாப்பிடும் வரை உண்ணாவிரதம்.
  பசி எடுத்ததும் உண்ணாவிரதத்த முடிச்சிக்குவாரு... என கலாய்க்கிறது இந்த டிவிட்

  ஜீயரே சொன்னார்..

  எஸ் வி சேகரும் எச் ராஜாவும்
  கேட்டுக்கொண்டதுக்கு இணங்க....உண்ணாவிரதம் வாபஸ்....
  யார் சொன்னா?
  ஜீயரே சொன்னார்!!!
  அப்ப சரி...அப்பசரி... என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

  கன்னதில் கை வைக்கமாட்டேன்

  உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் - செய்தி #
  மதியம் 3 மணி இந்த டைம்ல அன்னத்தில கை வைப்பனே தவிர யார் கன்னத்திலயும் கை வைக்க மாட்டேன்... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

  கலைஞர் மாதிரி

  பேசாம #ஜீயர் திமுக'ல சேரலாம்,கலைஞர் மாதிரி அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை சிறப்பா நடத்தறார்.. என்கிறார் இந்த வலைஞர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of jeeyar for withdrawing his hunger strike. Srivilliputhur Jeeyar started his hunger strike yesterday. He has concluded it today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற