டிரைவர் சம்பளத்தையும் சேர்த்து கேட்டுறாதீங்க...!! நெட்டிசன்ஸ் கலக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்எல்ஏக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் நடுவழியில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இதையடுத்து அந்தியூர் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் அரசு பேருந்தை இயக்கினார். அந்தியூர் முதல் பவானி வரை அவர் பேருந்தை இயக்கினார். இதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

சபாஷ் ராஜா

தற்காலிக ஓட்டுனர் ஆனார் அதிமுக சமஉ ராஜாகிருஷ்ணமூர்த்தி.
அந்தியூர் முதல் பவானிக்கு 50 பயணிகளுடன் பஸ்ஸை ஒட்டிச்சென்றார்.
சபாஷ் ராஜா

அமைச்சர்களும் ஓட்டலாமே

#BusStrike க்கால் மக்கள் பாதிப்படைவதை கண்டு
ஈரோட்டிலிருந்து அந்தியூர் வரை அரசு பேருந்தை இயக்கும் அதிமுக MLA ராஜகிருஷ்ணன்
# இப்படியே எல்லா MLAக்களும் அமைச்சர்களும் ஓட்டலாமே

பஸ் ஓட்டுறாராம்ப்பா..

எப்பா அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அவரே பஸ் ஓட்டுறாராம்ப்பா

சேர்த்து கேட்டுறாதீங்க..

பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்த எதிரொலி: அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற அந்தியூர் எம்.எல்.ஏ.
வாழ்த்துக்கள்..... டிரைவர் சம்பளத்தையும் சேர்த்து கேட்டுறாதீங்க...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens praising Andiyur ADMK MLA for driving govt bus. Transport trade unions conducts strike against government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X