ஏப்பு... வாட்ஸ் அப் கொஞ்ச நேரம் முடங்குனதுக்கே இத்தனை அமர்க்கள ரியாக்சன்களா? நெட்டிசன்ஸ் தெறி’

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்!- வீடியோ

சென்னை: வாட்ஸ் அப் எனும் தகவல் தொடர்பு செயலி சிறிது நேரம் முடங்கிப் போனதால் நெட்டிசன்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் ரியாக்சன்கள் சுவாரசியமானதாக இருக்கிறது.

இண்டர்நெட், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் உள்ளங்கைக்குள் உலகம் என்பது நிஜமானது. வாட்ஸ் அப் போன்ற செயலிகள் தகவல் தொடர்புகளை ரொம்பவே எளிமையாக்கிக் கொடுத்தது.

வாட்ஸ் அப் செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கினால் உலகமே முடங்கிப் போனதாக பரபரப்பு கிளம்பிவிடுகிறது. அப்படித்தான் இன்றும் சிறிது நேரம் வாட்ஸ் அப் செயலி முடங்கிப் போனது.

அவ்வளவுதான்.. நெட்டிசன்கள் குய்யோ முறையோ என குமுறித் தள்ளிவிட்டனர். #WhatsappDown என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி வாட்ஸ் அப் இல்லாமல் போனால் எங்க நிலைமை இதுதான் என தெறிக்க விட்டிருக்கின்றனர்.

சோகமா?

இந்த நெட்டிசன் போட்டிருப்பது அப்பாடா விடுதலை என்பதற்கா? அல்லது எப்படா வரும் என்பதற்காக என தெரியவில்லை.

அப்பட்டமான உண்மை

இந்த ட்விட்டர்வாசிதான் வாட்ஸ் அப் இல்லையெனில் நெட்டிசன்களின் நிலைமை என்ன என்பதை அப்பட்டமாக போட்டு உடைத்திருக்கிறார் போல

நல்ல ரியாக்சன்

வாட்ஸ் அப்பையே வீடாக நினைத்து கும்மியடிப்போருக்கு அது முடங்கியபோது இப்படியான ஒரு நிலைமைதான் இருந்திருக்கும்.

இப்படியும் இருக்கலாம்

வாட்ஸ் அப் இல்லாமல் போகிறபோது இப்படியும் கூட சிலர் ரியாக்சனை காட்டியிருக்கலாம்.

அதிக ரியாக்சன்

வாட்ஸ் அப் வாழ்வே வாழ்க்கை என வாழுகிற நெட்டிசன்களின் இப்படியாக ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கூட போயிருக்கலாம்தான் சாமீகளா.

வந்துட்டேன்னு சொல்லு

வாட்ஸ் அப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கிடுச்சாம். அதுக்குத்தான் இம்பூட்டு மகிழ்ச்சியாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Netizens reactions over the #WhatsappDown
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற