ஆமா ஜி சிஸ்டம் ஹேங் ஆகுது லேப்டாப்ல யூஸ் பண்றோம்... ரஜினிக்காக பறக்கும் ட்வீட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்-ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை : தமிழ்நாட்டில் தான் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு டுவிட்டரில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று போயஸ் தோட்டத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி தொடக்கத்தில் இருந்தே சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி வருகிறார். இன்று மீண்டும் தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் கூறி இருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  முதலில் அதை சரி பண்ணுங்க


  தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். மத்தியில் சிஸ்டம் ரொம்ப கஷ்டப்படுதாமே
  கர்நாடகா மகாராஷ்டிரா உபி பிகாரில் சிஸ்டம் ரொம்ப கேவலமா இருக்காமே. முதலில் அதையெல்லாம் சரி பண்ணிட்டு வாங்கோ
  தமிழக சிஸ்டத்தை சரிப்பண்ண தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க என்று ட்வீட்டியுள்ளார் இவர்.

  கதறு கதறுன்னு கதற மேட்டர் கிடைச்சிடுச்சு

  எதிர்ப்பாளர்கள் உருண்டு புரண்டு கதறு கதறுன்னு கதற ஒரு வாரத்துக்கு மேட்டர் கெடச்சிருக்கு. ஆரம்பிங்க என்று ரஜினியின் பேச்சுக்கு நக்கல் அடித்துள்ளார் இவர்.

  லேப்டாப் யூஸ் பண்றோம்

  ஆமா ஜி சிஸ்டம் சரி இல்ல ஹேங் ஆவுது.. அதான் லேப்டாப் யூஸ் பண்ணிக்குறோம் என்று ரஜினிக்கு டெக்னாலஜி ரீதியில் பதிலளித்துள்ளார் இவர்.

  கர்நாடகா எப்படி?

  முதலில் தமிழகத்தில் தான் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார். கர்நாடகவுல சிஸ்டம் கரீட்டா இருக்கா தலிவரே.?! என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth says that Tamilnadu system is not good netizens trolling his today's statement humourously. Here are some of the interesting tweets.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற