ஒரே படம் ஓராயிரம் கருத்துகள்... பின்றாங்கப்பா நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார் ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை : 2017ம் ஆண்டில் பட்டைய சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பிய ஒருவிஷயம் என்றால் அது மீம்ஸ், ட்ரால்கள், நச் கமென்ட்டுகள் தான். ரஜினி கருணாநிதியின் சந்திப்பு அரசியல் களத்தில் விவாதப் பொருளானது. பலரும் வளவளவென கருத்துகளை கூற நமது நெட்டிசன்களோ ஒரே புகைப்படத்தை வைத்து பல கருத்துகளை பல விதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி ஆன்மிக அரசியல் தான் தனது பாதை என்பதை தெளிவுபடுத்திவிட்டார். தொடர்ந்து சாமியார்களை சந்திந்து வந்தவர் நேற்று மாலையில் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

  திராவிட அரசியலை வித்திட்ட கருணாநிதியை ரஜினி சந்தித்தது மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி, கருணாநிதி சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஒரே ஒரு படத்தை வைத்து டிசைன் டிசைனா கற்பனைக் குதிரையை ஓடவிட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

  சொல்லியா தலைவரே?

  கருணாநிதி என்னப்பா கட்சி ஆரம்பிச்சிட்டுயா என்று கேட்பது போல ஒரு கற்பனையை போட்டுள்ளார் இவர். அதற்கு ரஜினி மோடி உங்களை பார்க வரும்போது சொல்லவில்லையா தலைவரே! என்று கேட்பதும் போல ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் இவர்.

  இப்படித் தான் காண்டா இருக்கும்

  ரஜினி, கருணாநிதி சந்திப்பின் போது ஒரு புகைப்படத்தில் கருணாநிதி முகத்தை திருப்பிக் கொண்டிருப்பது போன்ற படம் ஒன்று வெளியானது. அதை வைத்து இவர் ஒரு கருத்தை தட்டிவிட்டுள்ளார். நண்பனுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்திற்கு அழைக்கும் போது இப்படித் தான் காண்டா இருக்கும் என்று டுவீட்டியுள்ளார் இவர்.

  அறிவாலயம் அன்பாலயம் சந்திப்பு

  அண்ணாவின் அறிவாலயமும் (கருணாநிதி ) . தமிழக அன்னையரின் அன்பாலயமும்( ரஜினி காந்த் ) சந்தித்தது என்று சென்டிமென்டாக டுவீட் போட்டுள்ளார் இவர்.

  அரசியல் புரியவைக்கப்படும்

  ரஜினி படத்துல வேசம் போட்டாதான் அரசியல்வாதி, நாங்க பிறக்கும்போதே அரசியல்வாதி. ரஜினிக்கு அரசியல் புரியவைக்கபடும் என்று போட்டுள்ளார் இந்த சின்சியர் நெட்டிசன்.

  எத்தனை சீட்?

  ரஜினி : ஜயா...நான் அரசியலுக்கு வந்துட்டேன். என்னை ஆசிர்வாதம் பன்னுங்க. கலைஞர் : கூட்டணிக்கு வந்துட்டிங்களா.. எத்தனை சீட் ...எத்தனை கோடிக்கு பேசி முடிச்சாங்க..? ஸ்டாலின் : அப்பா...அவர் இப்ப தான் அரசியலுக்கே வந்திருக்கார். ஆசிர்வாதம் பன்னுங்க..! என்று நக்கலாக வசனம் எழுதியுள்ளார் இவர்

  அரசியலில் குதிக்கப் போறாராம்

  ரஜினி... நான் அரசியலில் கால் தடம் பதிக்க உள்ளேன் ஐயா. கலைஞர் ஐயா....மகனே என்னலே சொல்றாரு. ஸ்டாலின்....அரசியலில் குதிக்க போறாராராம். கலைஞர் ஐயா....வந்திடுவாரா உறுதியா. மக்கள்... வருவார்..... வருவார்...வருவார்.....�

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens trolling the image of Rajini met Karunanidhi yesterday evening at his gopalapuram residence, what is there conversation in the meeting has turned tremendous views.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற