2022.. உங்கிட்ட கேக்குறது ஒண்ணே ஒண்ணுதான்.. 2021 எவ்வளவோ பரவாயில்லைனு சொல்ல வச்சிடாத!
சென்னை: புத்தாண்டிற்கு எடுக்கப்படும் ரிசொல்யூசன்களில் முக்கியமானது உடற்பயிற்சிக்கூடத்திற்கு போக வேண்டும் என்பது. அதைக் கலாய்த்து பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
தீபாவளிக்கு புத்தாடை எடுப்பது போல, புத்தாண்டு வந்தால் புதிய ரிசொல்யூசன் எடுத்தே ஆக வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பார்கள். எடுத்த ரிசொல்யூசனை செய்கிறோமோ இல்லையோ என்பது வேறுகதை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருக்கும்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பது மாதிரி.. இந்த ரிசொல்யூசன்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலானோரின் புத்தாண்டு ரிசொல்யூசன், 'இந்த வருசமாவது ஜிம்முக்கு போகணும்யா..' என்பதுதான். இந்த உறுதிமொழியை ஆண்டுமுழுவதும் சரியாக கடைபிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் மறக்காமல் புத்தாண்டு அன்று எடுத்து விடுவார்கள்.
இதைக் கலாய்த்து சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் பொருந்திப் போகிற மாதிரி, ஜாலியாக இருப்பதாலேயே இந்த மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.










