For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
கம்ப்யூட்டர் பட்டதாரிகள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம்

சென்னை:

தகவல் தொழில் நுட்ப பொறியியல் பட்டதாரிகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் திங்களன்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்வர்கருணாநிதி பதிலளித்தார். அவர் அறிவித்ததாவது:

எழுபதுகளில் வெறும் கருத்துப் படிவமாக (கான்செப்ட்) மட்டுமே இருந்த தகவல் தொழில் நுட்பம் இன்று எங்கும் நிறைந்தபொருளாய் ஆகிவிட்டது. மானுட சதாயத்தின் சகல துறைகளும், தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு பிரிவும், தகவல் தொழில்நுட்பத்தால் குறிப்பாக "இ என்ற ஓரெழுத்து மந்திரத்தால் பின்னிப் பிணைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது.

இ-மெயில், இ-காமர்ஸ், இ-மெடிசின், இ-வால்யூ, இ-பிஸ், இ-ஸ்டாக், இ-எஜூகேஷன் என்று எல்லாத் துறைகளிலும், தகவல்தொழில்நுட்பம் வியாபகம் செய்து வருகிறது. செவிக்கும், கண்ணுக்கும் உலகத்தையே காட்டி வரும் "இன்டர்நெட்ல் இன்றுநறுமணத்தையும் பரப்புவதற்கான தொழில்நுட்பம் உருவாகி உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு ஆண்டும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதன் தொடர்பான கல்வியை பெற்றுவெளியே வரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் படித்து வெளியே வரும் 23 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில் 13 ஆயிரம் பட்டதாரிகளுக்குமேலாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதன் தொடர்பான கல்வியைப் பெற்று வெளியே வருகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்துவருகின்றனர். இன்றைய அளவில் தமிழகத்தில்22 ஆயிரம் பேருக்கு மேலான மென்பொருள் நிபுணர்கள் (சாப்ட்வேர்புரெபெஷனல்ஸ்) பணியாற்றி வருகின்றனர்.

1998 அக்டோபர் முதல் 1989 செப்டம்பர் வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 21, 371 பேருக்கு விசா வழங்கியுள்ளது.இதே காலகட்டத்தில் மும்பை தூதரகம் 9734 விசாக்களை வழங்கியுள்ளது. புதுடில்லி தூதரகம் 5460 பேருக்கும், கல்கத்தாதூதரகம் 1367 பேருக்கும் விசாக்களை வழங்கியுள்ளன.

தேசிய மென்பொருள் மற்றும் பணி நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்), "தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் எல்லாம் விரும்பித்தேர்ந்தெடுக்கும் முதல் நகரம் சென்னை என்று அறிவித்துள்ளது.

தகவல் தொழில் நுட்பத்திற்கென்று சென்னை தலைமைச் செயலகத்தில் தனி துறை ஏற்படுத்தியதோடு, தகவல் தொழில்நுட்பத்திற்கென்று தனியே கொள்கை ஒன்றை தமிழக அரசு தான் அறிவித்துள்ளது என்றார்.

-------------------

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X