தமிழகத்தில் இன்று
சென்னை:
நாடு முழுவதும் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தம் பற்றிய பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில் திருப்திஅளிக்கவில்லை என்று கூறி, தமிழக சட்டசபையில் எதிர்க் கட்சிகள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோலியம் மற்றும் உரம் போன்றபொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை முன் வைத்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாடு முழுவதும் பொதுவேலை நிறுத்தம் செய்ய 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
அந்த அழைப்புக்கு தமிழகத்தில் அதிமுக, தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில் இப்பிரச்னை பற்றி சட்டசபையில் நேற்று எதிர்க் கட்சிகள் அனைத்தும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.
அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இத்தீர்மானத்தை விவாதிக்க சபாநாயகர் அனுமதியளித்தார். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் (தமாகா), சுந்தரம் (அதிமுக), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஹேமச்சந்திரன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
மத்திய மாநில அரசுகளின் பொருளாதார நிலையை கடுமையாக கண்டித்த அவர்கள், மத்திய அரசு எடுத்த விலை உயர்வுமுடிவை மாநில அரசு ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். அவர் கூறியதாவது:
இந்த பிரச்னைகளை வலியுறுத்தி இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டு, தமிழகத்திலும் அதற்குஆதரவு தேடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பந்த் நடைபெறவில்லை. எனினும் ஜனநாயக ரீதியில் இது பற்றி விவாதிப்பதற்குஅனுமதி அளிக்கப்பட்டது. 40 நிமிடம் விவாதம் நடைபெற்றது.
இங்கே பேசிய உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு இணக்கமாக தமிழக அரசு நடந்து கொள்வதாக குறிப்பிட்டனர். மத்திய அரசுடன்மாநில அரசு இணக்கமான முறையில் செயல்பட்டால் தான் நாட்டின் இறையான்மையை ஏற்படுத்த முடியும்.
தற்போது மத்திய அரசு நடைறைப்படுத்தி வரும் கொள்கைகள் இப்போது கொண்டு வரப்பட்டதல்ல. மத்தியில் அதிமுகஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, மன்மோகன் சிங் தான் கொண்டு வந்தார். தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கையை மார்க்சிஸ்ட் கட்சி கூட அவ்வப்போது எதிர்த்தாலும் ஆதரிக்கத் தான் செய்துள்ளது. அப்படிப்பட்ட தர்மசங்கடமானநிலை திமுகவுக்கு மட்டும் வரும் என்று எண்ணக் கூடாது.
இதில் முக்கியமானது பெட்ரோலியம், சமையல் வாயு விலை உயர்வு தான். வளைகுடா நாடுகளில் பெட்ரோல் விலை குறைந்தால்,இங்கும் குறையும். ஆனால், மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், பெட்ரோலியம் மானியமாக மத்திய அரசு23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது. இப்போது நீங்கள் எல்லாம் எதிர்க்கும் விலை உயர்வால் 6 ஆயிரம் கோடி ரூபாய் தான்வருமானம் கிடைக்கும். அதுபோக, இன்னும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மானியச் சுமை அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொது உணர்வு எங்களுக்கும் உண்டு. ஐக்கிய முன்னணி அரசு இருக்கும் போது லாலு பிரசாத் யாதவை, அணியில் இருந்து நீக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. பின்னர் அதே லாலுவை ஆதரித்து சுர்ஜித் பிரசாரம் செய்தார்.ஜெயலலிதாவையே ஆதரிக்கும்போது லாலுவை ஆதரிப்பதில் என்ன தவறு என்று இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் கேட்பதுஎனக்கு புரிகிறது.
அந்த ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு எங்களையும் வேலை நிறுத்தம் செய்ய அழைக்கிறீர்களே, எங்களால் எப்படி அய்யாமுடியும் என்றார் முதல்வர்.
பின்னர் முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சட்டமன்றத்தில் இருந்து தமாகா, அதிமுக, சிபிஎம், சிபிஐஉள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications