தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹென்றி லூயிஸ் தென்னை மரங்களைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதற்கான புதிய மூலிகைமருந்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த மூலிகையை அவர் நிருபர்கள் முன்னிலையில் தயாரித்துக் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், வேப்பஇலைகள், கியூமா லங்கோம், வின்காரோசியா, கேம்பர் இன்டிகா, அனோனா சமோன்சா போன்ற பல தாவரங்களின் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மூலிகை தான் நாங்கள்கண்டுபிடித்த மூலிகை.
இதைத் தென்மரத்தின் மடல்களிலும், வேர்ப்பகுதிகளிலும் தெளிக்கலாம். இதைத் தெளிப்பதால் தென்னை மரங்களில் உள்ள நோய்கள் விரைவில் நின்றுவிடும்.
பல மூலிகைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த மூலிகை மருந்தை நீருடன் கலந்து தென்னை மரங்களின் வேர்ப்பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
இதுவரை 12, 000 ஆயிரம் தென்னைமரங்களில் தெளிக்கப்பட்டுள்ளது. மூலிகை மருந்து தெளிக்கப்பட்டுள்ள அனைத்து மரங்களும் நல்ல பலனைத்தந்துள்ளன.
கேரளாவிலும், தமிழகத்திலும் ஏராளமான தென்னைமரங்கள் உள்ளன. தென்னை விவசாயிகள் அனைவரும் இந்த மூலிகையைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.
நான் விவசாயிகளுக்காக குறைந்த விலையில் இந்த மூலிகையை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ