For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இளைஞர்களுக்கு ஏற்றதா இந்திய ராணுவம்? ஒரு மேஜர், ஒரு கேப்டன் அலசுகிறார்கள்

டெல்லி:

MajorPattuஇந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேருவது குறைந்து வருகிறது. தவறு அரசிடமா?இளைஞர்களிடமா?

ராணுவத்தில் உள்ள 2 இளைஞர்களிடம் ஒரு பேட்டி:

ராணுவத்தில் இருக்கிறோம் என்ற புகழை மட்டும் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டமுடியாது என்கிறார் ஒரு ராணுவ மேஜர். இன்னொரு கேப்டனோ, ராணுவத்தில்இருக்கிறோம் என்பதே பெருமையாக இருக்கிறது என்கிறார்.

போன வருடத்தை இந்தியர்கள் மறந்திருக்க முடியாது. கார்கில் பகுதியில் பாகிஸ்தான்ஆதரவுடன் தீவிரவாதிகள் நடத்திய ஊடுறுவலும், அதை முறியடிக்க இந்திய ராணுவம்மேற்கொண்ட இடைவிடாத போரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதது.

தீவிரவாதிகளின் ஊடுறுவலை முறியடிக்க முதலில் களம் இறங்கியது ராணுவம்தான்.இந்திய ராணுவத்தின் வலிமையும், தீரமும் பாகிஸ்தானுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

ஆனால் ராணுவம் குறித்து ராணுவத்தினரிடையே என்ன கருத்து நிலவுகிறது.?.முன்புஇந்திய ராணுவத்தில் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்ஆர்வத்துடன்சேர்ந்தனர். அரச குடும்பத்தினர், ஜமீன் குடும்பத்தினர் தங்களது வாரிசுகளை"பட்டாளத்தில் சேர்ப்பதில் பெருமைப்பட்டனர். ஆனால் இன்று..?

இந்திய ராணுவத்தில் இப்போதுள்ள அதிகாரிகள் எண்ணிக்கை 15,000-க்கும்குறைவாகும். நல்ல திறமை படைத்த, இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதில் ஆர்வம்காட்டுவதில்லை. மாறாக, நல்ல சம்பளம் கொண்ட வேலைகளுக்குச் செல்லுவதில் ஆர்வம்காட்டுகின்றனர். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்றஆர்வம் குறைந்து விட்டது.

ராணுவ மேஜராக உள்ள ஆதிராஜ் சிங், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறக் கேட்டுவிண்ணப்பித்துள்ளார். ஆதிராஜ் கூறுகையில், வெறும் புகழுக்காக ராணுவத்தில் இருப்பதுவீண். அதை நான் விரும்பவில்லை. சம்பளம் போன்றவற்றை ராணுவம் அதிகரிக்கவேண்டும். இப்போதெல்லாம் வெறும் புகழையும், பெருமையையும் வைத்துக் கொண்டுஎதுவும் செய்ய முடியாது என்கிறார்.

ஆதிராஜ் சிங் தொடர்கிறார்...

ராணுவத்தின் மொத்த முகமும் இப்போது மாறி விட்டது. இது ஒரு நல்ல வேலைதான்.பாதுகாப்பானதும், நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பதுமான வேலைதான். ஆனால் நடுத்தரகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்திய. ராணுவத்தில் சேர முடியும்.அவர்களுக்குத்தான் இது பொருத்தமானது. ஆனால் அவர்களிலும், பெரும்பாலனவர்கள்வேறு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர்.

பிற வேலைகளில் கொடுக்கப்படுவதை விட குறைந்த அளவிலான சம்பளமே ராணுவத்தில்கொடுக்கப்படுகிறது. இக்காலத்தில் பணமும் முக்கியமானதுதான். முன்பெல்லாம்பெருமைக்காகவும், புகழுக்காகவும்தான் ராணுவத்தில் சேருவார்கள்.

பல குடும்பங்களில், பெரும்பாலானவர்கள் ராணுவத்தில் இருந்திருப்பார்கள். அந்தப்பெருமையைக் காப்பாற்றுவதற்காக அவர்களது வாரிசுகள் ராணுவத்தில் சேருவார்கள்.ஆனால் இப்போது அதுவும் ஒரு வேலையாகவே பார்க்கப்படுகிறது. சம்பளம் குறைவாகஇருப்பதால் ராணுவத்தில் சேர ஆர்வம் குறைந்து விட்டது.

சில குறிப்பிட்ட பிரிவினருக்கே ராணுவம் பாதுகாப்பான ஒரு வேலை. குறைந்தஅளவிலான சம்பளம் பெறுவோருக்கு ராணுவம் மிகப் பாதுகாப்பான வேலையாகத்தெரியலாம். மற்றொன்று பழம் பெருமைக்காக ராணுவத்தில் சேருவது. இது இரண்டும்தான்ஒருவர் ராணுவத்தில் சேருவதற்குக் காரணம்.

தேசபக்தி எல்லாம் இப்போது இல்லை. கார்கிலில் உயிரைக் கொடுத்துப் போராடியவீரர்கள், டெல்லியில் உள்ள தங்களது சக வீரர்களை விட சற்றே கூடுதல் ஊதியம்பெறுகிறார்கள்.

கார்கிலிலும், சியாச்சினிலும் போராடும் வீரர், வெறும் பெறுமைக்காக மட்டும்போராடவில்லை. அவர் உயிரிழந்தால் அல்லது காயமடைந்தால் அவருக்குரிய இழப்பீடுகொடுக்கப்படுகிறது.

வெறும் கெளரவம் மட்டும் ஒருவருக்குப் போதாது. கெளரவம் மட்டும் போதுமென்றால்,இந்தியாவில் இன்று எத்தனை பேர் ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும்?. ஏன்அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறது?.

ராணுவம் குறித்து மக்களிடம் கவர்ச்சியும், ஆர்வமும் ஏற்பட வேண்டுமென்றால்அதுகுறித்து மக்களிடம் நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். மக்களைக் கவரும் விதத்தில்ராணுவத்தின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கிறார் ஆதிராஜ் சிங்.

பரம திருப்தி

கேப்டன் ராஜேஷ் பட்டுவின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. ராணுவம்தான் சிறந்தவேலை. கட்டுப்பாடான, ஒழுக்கமான வேலை இதுதான். ராணுவத்தில் இருப்பதேபெருமையான விஷயம் என்கிறார் இவர்.

ராணுவத்தில் சேர்ந்ததை பெருமையாக நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரையில்இதுதான் சிறந்த வேலை. நான் சந்திக்கும் ஒவ்வொரு இளைஞனிடம், நீ ராணுவத்தில்சேர்ந்தால் மட்டுமே நல்ல மனிதனாக மாற முடியும் என்பேன். வேறு எந்த வேலையிலும்,இத்தகைய நம்பிக்கை, அனுபவம் கிடைக்காது.

மனதளவிலும், உடல் அளவிலும் நம்மை உறுதியாக்குவது ராணுவம்தான். கெளரவமான,தெளிவான வாழ்க்கையைக் கொடுப்பது ராணுவம்தான். எந்தவித அரசியல் குறுக்கீடும்இல்லாதது ராணுவம் மட்டும்தான்.

ராணுவத்தில் பணியாற்றுவதால் பரம திருப்தியாக உள்ளது. நமக்குள் உள்ள அவநம்பிக்கைஅகலுகிறது. முழுமையான நம்பிக்கை உருவாகிறது. இது மட்டுமல்லாது, ராணுவத்தில்கிடைக்கும் தோழமைக்கு இணையாக எதையும் காட்ட முடியாது. இது ராணுவத்திற்கேஉரிய தனிப் பெருமை.

பல நிறுவனங்கள் நல்ல சம்பளம் கொடுக்கலாம். கவர்ச்சிகரமான சலுகைகளைத் தரலாம்.நான் மறுக்கவில்லை. ஆனால் எந்த நிறுவனமாவது, ராணுவம் தருவது போன்றபொறுப்புணர்வை, உறுதியைத் தருகிறதா?. ராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

பெரும்பான்மையானோர் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டாததற்கு பணமும் ஒருகாரணமாக இருக்கலாம். சிலருக்குப் பணமே பிரதானம். ஆனால் பணத்தால் வாங்கமுடியாத பல விஷயங்களை ராணுவம் கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது.

கார்கில் போர் பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. கார்கிலில் தனது மகனைப்பறிகொடுத்த ஒரு தாயைச் சமீபத்தில் சந்தித்தேன். தனது மகன் தனக்கு எழுதிய கடிதத்தைஅவர் என்னிடம் காட்டினார். அதில், "அம்மா, ஒருவேளை நான் திரும்ப முடியாமல்போகலாம். ஆனால் அதற்காக ராணுவத்தைக் குறை கூறாதீர்கள். நான் ராணுவத்தில்சேர்ந்ததற்காக வருத்தப்படாதீர்கள். நமது நாட்டின் பெருமையைக் காக்க, எதிரிகளைதோற்கடிக்க மீண்டும் நான் பிறப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அதில்எழுதியிருந்தது.

இதை விட அந்தத் தாய்க்கு என்ன பெரிதாக இருந்து விட முடியும். இந்தத் தாய்க்கு உரியகெளவரத்தை நாடு கொடுத்தது. அதைவிட, சாதாரண இந்தியர்களுக்குக் கிடைக்காதபெருமையையும் கொடுத்தது.

ராணுவத்தில் சேர்ந்ததால் எனக்கு வருத்தமேயில்லை. வெறும் சம்பளத்திற்காக மட்டும்ராணுவத்தில் யாரும் சேர்வதில்லை. ராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்ததேகிடைக்கிறது. பணத்திற்கும் மேலான திருப்தி அங்கே கிடைக்கிறது.

நமது குழந்தைகள் நல்லமுறையில் வளர் வாய்ப்பு கிடைக்கிறது. ராணுவ வாழ்க்கைஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இங்கு கிடைக்கும் விளையாட்டு வாய்ப்பு எங்கும்கிடைக்காது. நாடு முழுவதிலும் பயணிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார் ராஜேஷ்முகத்தில் திருப்தி பிரதிபலிக்க.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X