For Quick Alerts
For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
இந்தி சினிமா பாடலாசிரியர் சுல்தான்புரி மரணம்
மும்பை:
பழம்பெரும் இந்தி சினிமா பாடலாசிரியரும், தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவருமான மஜ்ரூர் சுல்தான்புரி நுரையீரல் நோயால் புதன்கிழமைமரணமடைந்தார்.
மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் நுரையீரல் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 78. மனைவி, மகன், மகள்ஆகியோர் உள்ளனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திப் படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தவர் சுல்தான்புரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சினிமாத் துறையில் மத்தியஅரசால் வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]