அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

""தெற்காசியாவை இந்திய துணைக் கண்டம் என்று கூறுவதா?"" - பாகிஸ்தான் கண்டனம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> இஸ்லாமாபாத்:

தெற்காசியப் பகுதிகளை இந்திய துணைக் கண்டம் என்று இந்தியா கூறியதற்குப்பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உள்துறை அமைச்சர்எல்.கே. அத்வானி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தெற்காசியப்பகுதியை இந்திய துணைக் கண்டம் என்று குறிப்பிட்டார்.

அத்வானியின் இப் பேச்சுக்குப் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

தெற்காசியப் பகுதியில் உள்ள பல நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால்,தெற்காசியப் பகுதி முழுவதையும் இந்திய துணைக் கண்டம் என்று கூறுவது தவறானது.இது கண்டிக்கத்தக்கது.

தெற்காசியப் பகுதியில் ஒரு வல்லரசு நாடாக தன்னைக் காட்டிக் கொள்ள இந்தியாமுயற்சித்தது. ஆனால், அதைச் சாதிக்க முடியவில்லை. அதனால்தான் தெற்காசியப்பகுதியை இந்திய துணைக் கண்டம் என்று இந்தியா அழைக்கிறது.

எதிர்காலத்தில் தெற்காசியப் பகுதியை இந்திய துணைக் கண்டம் என்று கூறுவதைஇந்தியா தவிர்க்கும் என்று பாகிஸ்தான் கருதுகிறது என்றார் அவர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற