For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மீண்டும் நிரூபித்த வைரமுத்து

வைரமுத்து

Vairamuthuவடுகபட்டி வைரமுத்து மீண்டும் தேசிய விருது பெற்றுள்ளார்.

இதற்கு முன் சிந்து பைரவி, ரோஜா, கருத்தம்மா ஆகிய படங்களுக்கு விருது பெற்ற வைரமுத்து இப்போது மீண்டும் விருதுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

சங்கமம் படத்தில் வரும் "முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்..." பாடலுக்கு இப்போது விருது கிடைத்துள்ளது.

இவரது எல்லா பாடல்களுமே தேசிய விருதைத் தொடும் தரம் கொண்டவை தான்.

மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா பாடல்களுக்கு அங்கீகாரம் வாங்கித் தந்து கொண்டிருக்கும் வைரமுத்துவுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி.

சேது

Sethuதமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய படம் சேது. புதிய இயக்குனர் பாலாவின் சிறந்த இயக்கம், விக்ரமின் சூப்பர் நடிப்பு, இளையராஜாவின் உருக்கும் இசைஎன பல அம்சங்களைக் கொண்டது சேது.

இந்தப் படத்தில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மொட்டை அடித்து நடிக்கும் நடிகர்களை பார்த்திருக்கிறோம்.கதாபாத்திரத்துக்காக மொட்டையுடன் உடம்பை இளைத்துக் கொண்டு, தனது நிறத்தையும் வெயிலில் நின்று நின்று கருப்பாக்கிக் கொண்டு அசத்தினார்விக்ரம்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களை "கனத்த இதயத்தோடு" வீட்டுக்கு அனுப்பிய "சூப்பர் இம்பாக்ட்" படம்.

சரிகா கமலஹாசன் - ஹே ராம் ஆடை வடிவமைப்பாளர்

Sarika Kamalhasanநம்மவர் துவங்கி ஹே ராம் வரையிலான கமலஹாசனின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

குருதிப் புனலில் விருதை எதிர்பார்த்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அப்போது விட்டதை இப்போது ஹேராமில் பெற்று விட்டார்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை காட்டும் படம். கமல், ராணி முகர்ஜி, வசுந்தரா அனைவரையுமே அந்த கால உடைகளில் கச்சிதமாகக்காட்டினார் சரிகா.

அதுல் குல்கர்னி - சிறந்த துணை நடிகர்

ஹே ராம் படத்தில் அபயங்கர் என்ற வங்காள கவிஞராக நடித்தவர். மராத்தி நாடக நடிகர். சிறந்த நடிகரான அதுல் குல்கர்னி, பூமி கீதா என்ற கன்னடப்படம் உள்பட பல நாடகங்களில் நடித்துள்ளார்.

ஹே ராமில் அபயங்கர் என்ற பொறி பறக்கும் கேரக்டரில் வந்து கமலஹாசனை தீவிரவாதத்திற்கு அழைத்துச் செல்லும் பாத்திரத்தில் நடித்திருந்தார்.அவரது நடிப்புக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கூரிய கண்கள், அடிக்குரலில் அழுத்தமான பேச்சு, ஒல்லியான தேகம் என எல்லாமே இவரது பிளஸ் பாயிண்ட்ஸ்.

மெஸ்ஸர்ஸ் மந்த்ரா - சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ்.

ஹே ராமின் ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக விருது பெற்றுள்ளார். துப்பாக்கியுடன் நிற்கும் கமலை சுற்றி புழுதிப் புயல் வீசுவது, சுடப்பட்ட காந்தியடிகள் தள்ளிவிழுவது என எல்லாமே இவரது கிராபிக் ஜாலம் தான்.

(தமிழ் சினிமாவின் இந்த வெற்றிகள் குறித்து உங்கள் கருத்தை அனுப்பலாம்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X