தமிழகத்தில் இன்று
கைதி தற்கொலை: ஜெயில் வார்டன் சஸ்பெண்ட்
கோவை:
கோவை மத்திய சிறையில் லாரி முன் பாய்ந்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஜெயில்வார்டனை சிறைத் துறை டி.ஐ.ஜி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே கடந்த 1997 ம் ஆண்டு இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிக்கொலை செய்த வழக்குத் தொடர்பாக சுப்ரமணி யன் (35) என்பவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இவர் சிறைக்குள் மணல் ஏற்றி வந்த லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து நீண்ட நாள் விசாரணை நடந்தது.
இந்தச் சம்பவம் நடந்த போது பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக பிரபாகரன் என்ற சிறைவார்டனை, சிறைத் துறை டி.ஐ.ஜி. எஸ்றா, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!