தமிழகத்தில் இன்று
ஜெயலலிதா ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சாட்சி
சென்னை:
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண நிகழ்ச்சியில் பணம் எதுவும் வாங்காமல்இசை நிகழ்ச்சி நடத்தினேன் என்று இளம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனி நீதிமன்றத்தில்சாட்சியம் அளித்தார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
சுதாகரனின் ஆடம்பர திருமணத்திற்கான செலவு விவரங்களை நீதிமன்றம் இப்போது விசாரித்துவருகிறது. அது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக ரகுமான் வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில்ஆஜரானார். நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.
அவர் அளித்த சாட்சியம் வருமாறு:
நான் சினிமா துறையில் 8 ஆண்டுகளாக இசை அமைப்பாளராக உள்ளேன். முதல்வர் என்ற முறையில்ஜெயலலிதாவை எனக்கு தெரியும்.
1995 ஜூலையில் ஜெயலலிதாவின் துணைச் செயலாளர் ஜவகர்பாபு என்னை தொலைபேசியில் அழைத்துமுதல்வர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி நானும் என் தாயார் கரீமாபேகத்துடன் சென்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன்.
என் மகன் சுதாகரன் திருமணத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார்.திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக இந்த (6.9.1995) நிகழ்ச்சி நடத்த வண்டும் என்றார். நானும்சம்மதித்தேன்.
திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் (சுதாகரன் அண்ணன்) தனது மனைவியுடன் என் வீட்டிற்குவந்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
வெள்ளித்தட்டில் 2 பட்டுப்புடவையுடன் அழைப்பிதழ் கொடுத்தனர். அந்த பட்டுப் புடவை மற்றும்வெள்ளித் தட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நான் கொடுத்து விட்டேன். (அந்த பொருட்களைநீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்)
மணமகள் வீட்டு சார்பில் நடிகர் பிரபுவும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஒப்புக் கொண்டபடி திருமணத்திற்கு முந்தின நாள் இரவு 9.45 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் இசைநிகழ்ச்சி நடத்தினேன். என் இசைக்குழுவில் 25 முதல் 30 பேர் இருந்தனர். நான் நடத்திய இசைநகழ்ச்சிக்காக பணம் எதையும் வாங்கவில்லை என்றார் ரகுமான்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!