For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

780 மெட்ரிக் டன் ஆப்பிள் ஜூஸ் ஏற்றுமதி: இமாச்சலப் பிரதேசம் சாதனை

By Staff
Google Oneindia Tamil News

ஷிம்லா:

இமாச்சல பிரதேச அரசுக்குச் சொந்தமான அம் மாநில தோட்டக்கலை உற்பத்தி,விற்பனை மற்றும் பதப்படுத்துக் கழகம் 780 மெட்ரிக் டன் அளவுக்கு ஆப்பிள் ஜூஸ்ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

இத் தகவலை அம் மாநில தோட்டக்கலைத் துறை அமைச்சர் நரீந்தர் பிராக்தாதெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து ஜெர்மனி, கானா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகஅளவில் ஆப்பிள் ஜூஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்கண்ட நாடுகளுக்கு இந்தஆண்டில் மட்டும் 780 மெட்ரிக் டன் ஆப்பிள் ஜூஸ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸுக்கு நல்ல தரமான ஜூஸ்என்று அந் நாடு சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு பழ ஜூஸ்களை ஏற்றுமதி செய்வதுடன் இந்திய ரயில்வே மற்றும்இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் பழச் சாறுகளை இமாச்சலப் பிரதேசதோட்டக்கலை உற்பத்தி, உற்பத்தி மற்றும் பதப்படுத்துக் கழகம் சப்ளை செய்துவருகிறது.

இக் கழகத்துக்கு பார்வானூ மற்றும் ஜரோல் ஆகிய இடங்களில் ஆப்பிள் ஜூஸ்தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு தினசரி 130 மெட்ரிக் டன் ஆப்பிள் பழங்கள்பதப்படுத்தப்பட்டு ஜூஸ் தயாரிக்கப்பட்ட உபயோகிக்கப்படுகின்றன.

ஆப்பிள் உற்பத்தியில் இந்தியாவிலேயே இமாச்சலப் பிரதேச மாநிலம் முதலிடத்தில்உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஒரு கோடி ஆப்பிள் பெட்டிகள் நாட்டின் பல்வேறுபகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X