For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னுடன் நட்பாவது உண்டா கருணாநிதி? உணர்ச்சிவசப்படுகிறார் மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

த.மா.கா.வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறியுள்ள முதல்வர்கருணாநிதி, என்னுடனான நட்புக்கும் அவ்வாறு கூறியுள்ளாரா என்பதைத்தெரிவிக்கவேண்டும் என்று தமாகா தலைவர் மூப்பனார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கொண்டாடப்பட உள்ள பெரியாரின் 122-வது பிறந்த நாள் விழாகுறித்து அதிமுக-தமாகா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமைநடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மூப்பனார் தலைமை தாங்கினார்.

காலையிலிருந்து மாலை வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகுநிருபர்களிடம் மூப்பனார் கூறியதாவது:

சென்னை பனகல் பூங்காவில் பெரியாரின் பிறந்த நாளை செப்டம்பர் 23-ம் தேதிகொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர்தேவகவுடா, கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், லத்தீப்,நல்லகண்ணு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, தமாகாவுடன் ஒட்டும் இல்லைஉறவும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிக் கூறியதன் மூலம் எங்களுக்கு அவர்விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றி.

எங்களுக்கு முகவரி தேடிக் கொடுத்ததாக அமைச்சர் அன்பழகன் பேசியுள்ளார்.அதற்காக அவருக்கும் நன்றி, மகிழ்ச்சி.

தமாகாவுடன் அரசியல் உறவு இல்லை என்பதை திமுகவும், திமுகவுடன் அரசியல்உறவு இல்லை என்று நாங்களும் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம்.

இந் நிலையில் தமாகாவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கருணாநிதிகூறியுள்ளார். நானும் கருணாநிதியும் ஒரு பண்பாடு, கலாசாரத்தை வளர்க்கவேண்டும்என்று கருதியிருந்தோம்.

அதாவது அரசியலில் கருத்து வேறுபாடு எவ்வளவு இருந்தாலும், இருவருக்கும்இடையே நட்புறவு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் அது.

இப்போது ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறியிருப்பது அதற்கும்சேர்த்துத்தானா என்பதை கருணாநிதி விளக்கவேண்டும்.

பெரியாருக்கு விழா எடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர்விமர்சிக்கிறார்கள். பெரியாரை தோழர் ராமசாமி என்று அழைத்தவர் கருணாநிதி.

அவருக்குத் தான் பெரியாருக்கு விழா எடுக்க உரிமை உண்டு என்பது உண்மைதான்.அதேநேரத்தில் மற்றவர்களுக்கும் அதே உரிமை உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியார் விழாவுக்கு ஜெயலலிதா தலைமை தாங்குவது 9-வது உலக அதிசயம் என்றுதிமுகவினர் கூறியுள்ளனர். 8-வது உலக அதிசயத்துக்குப் பிறகு 9-வது உலக அதிசயம்வந்துதானே தீரும்.

ப. சிதம்பரம் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜக கூறியுள்ளது. வந்தால்என்றுதான் பாஜக கூறியுள்ளது. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா. முதலில் மீசைமுளைக்கட்டும் பார்க்கலாம்.

அதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சமீப காலமாக இருந்த கருத்துவேறுபாடுகள், பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என்று நான் கருதுகிறேன் என்றார்மூப்பனார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X