For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

180 பயணிகளுடன் வானில் 3 முறை "பல்டி அடித்த விமானம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

180 பயணிகளுடன் வானில் மூன்று குட்டிக்கரணம் அடித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

விமானியின் சாதுரியத்தால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 32 பயணிகள் காயமடைந்தனர். ஐவர் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவையே உலுக்கக் காத்திருந்த ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சென்னை விமான நிலைய வட்டாரம் இருக்கிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இந்தியர் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.555 இந்திய நேரப்படி சென்னையில் இருந்து செவ்வாய் கிழமை அதிகாலை 3மணிக்கு கிளம்பியது. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் சரியாக 3.20 மணிக்குதிடீரென்று நிலை குலைந்தது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் வானில் குட்டிக்கரணம் அடிக்கத் துவங்கியது. அடுத்தடுத்து மூன்று குட்டிக்கரணம் போட்ட அந்தவிமானத்தில் இருந்த 180 பயணிகள், 11 பணியாளர்கள் பயத்தில் அலறித் துடித்தனர்.

ஆனாலும், விமானம் முழுக் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்னர் அதை அவசரமாக அவசரமாக தரையிறக்கும் முயற்சியில் விமானிஈடுபட்டார். அந்த இக்கட்டான நிலையிலும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி, உதவிகேட்டார்.

அவர்கள் கொடுத்த தகவல்களை கடைப்பிடித்து விமானத்தை உடனடியாக உயரத்தில் இருந்து கீழே இறங்கச் செய்தார். அதே வேகத்தில் தரையிறங்கும்முயற்சியில் ஈடுபட்டார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

அதிகாலை 4 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அடித்த குட்டிக்கரணங்களில் பயணிகள் இடம் மாறிக் கிடந்தனர். கை, கால்களில் அடிபட்டுதுடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைக்காக "மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடனடியாக சிகிச்சை தரப்பட்டது. ஐவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் பெயர் டாக்டர் புஷ்பரராஜ், மணி, முகமது, அப்துல் மஜீத், ஆரிப் ஆகியோர். இவர்களை தவிர மற்ற பயணிகள் செவ்வாய் கிழமை பகல்12.30 மணி விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X