For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க சண்முகசுந்தரம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தன வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என நெடுமாறனுடன் தூதுக் குழுவில் காட்டுக்குக் சென்ற கர்நாடகதமிழ்ப் பேரவையின் தலைவர் சண்முகசுந்தரம் கூறினார்.

யு.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், யாரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. அப்பாவி கிராம மக்கள்மீது அதிரடப்படையினர் நடத்திய வன்முறை தான் வீரப்பனை கொடூரமானவனாக மாற்றியுள்ளது.

அதிரடிப்படையின் அட்டூழியங்களைப் பார்த்தால் மானம், மரியாதை உள்ள யாருமே தலைகுனியாமல் இருக்க முடியாது. அந்தஅளவுக்குக் கொடுமை நடந்துள்ளது. 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கு வித்தியாசம் தெரியாத அப்பாவிகள் கூட வீரப்பன்கூட்டாளிகள் என்று கூற்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

படிப்பறிவில்லாத அப்பாவிகளை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளது அதிரடிப்படை. 7 ஆண்டுகளாக விசாரணைகூட இல்லாமல் மைசூர் சிறையில் தவித்து வரும் தடா கைதிகளை விடுவிக்க ஜனநாயகரீதியில் போராடுவேன் என நெடுமாறன்உறுதி மொழி அளித்ததைத் தொடர்ந்து தான் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார். தடா கைதிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்அமைக்கப்பட்டதை அடுத்துத் தான் ராஜ்குமாரை விடுவிக்கவே வீரப்பன் முன் வந்தார்.

மேலும், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரணம் அளிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷன் அறிக்கைமீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு உறுதிமொழி அளித்ததும் ராஜ்குமாரை மீட்க உதவியது.

அரசியல் லாபத்துக்காக தங்களுக்குள் அடித்து நாறிக் கொள்ளும் அரசியல்வாதிகள் இது போன்ற மனிதாபிமான விஷயத்திற்காகபோராடினால் நல்லது.

தன்னலமற்ற, அச்சமற்ற நெடுமாறனை நம்பித்தான் வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தார்.

4வது முறையாக கோபாலால் ராஜ்குமாரை முடியாமல் போனதால் தான், தன்னுடன் நெடுமாறனையும் அழைத்துச் செலலகோபால் முன் வந்தார். கர்நாடகத் தமிழர்களின் நலனுக்காகத் தான் அவர் அந்த முயற்சியில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தான்வீரப்பனிடமிருந்தும் நெடுமாறனை அழைத்து வரச் சொல்லி கேஸட் வந்தது.

நெடுமாறன் முதல் முறையாக காட்டுக்குச் சென்றபோதே நானும்,கொளத்தூர் மணியும் உடன் சென்றோம். ஆனால், நாஙகள்இருவரும் காட்டில் ஒரு எல்லையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டோம். அப்போது வீரப்பனை நாங்கள் சந்திக்கவில்லை. கடைசிமுறை தான் நான வீரப்பனைச் சந்தித்தேன்.

வீரப்பனை மீட்க காட்டுக்குச் செல்லத் தயார் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு தகவல் அனுப்பினேன். டாக்டர் பானுமதி,ராம்குமார் ஆகியோரையும் நான் தான் காட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தேன்.

13ம் தேதியே காட்டுக்குள் சென்றுவிட்டோம். ஆனால், வீரப்பன் இடத்தை அடைய முடியவில்லை. அடுத்த நாள் தான் வீரப்பனைசந்தித்தோம். உடனடியாக பானுமதி, ராஜ்குமார் உடல் நிலையை பரிசோதித்தார்.

ராஜ்குமாரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இனி காட்டுக்குள் செல்ல மாட்டேன் என நெடுமாறன்அறிவித்திருந்ததைக் கேட்டு ராஜ்குமார் மிகவும் உடைந்து போயிருந்தார். அவருக்கு மனரீதியில் தைரியம் கொடுக்கவேமருத்துவரை உடன் அழைத்துச் சென்றோம். ராஜ்குமாருக்கு, பானுமதி வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்தார்.

மாலை 5 மணிக்கு வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தார். நள்ளிரவில் தான் காட்டின் எல்லையை அடைந்தோம்.

15ம் தேதி காலை ராஜ்குமாரை அவரது மனைவி, மகன்கள் சந்தித்த காட்சி நெஞ்சை உருக்கிவிட்டது. அவர்களால் பேசக் கூடமுடியவில்லை. அவர்கள் கட்டிப்பிடித்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை டாக்டர் பானுமதி தான்சமாதானப்படுத்தினார் என்றார் சண்முகசுந்தரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X