For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாகவா முனிவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

யாகவா முனிவர் செவ்வாய்கிழமை காலை திடீரென மாரடைப்பால் காலமானார்.

ஆன்மீகத் தலைவர்களில் மகிவும் வித்யாசமாக வாழ்ந்தவர் யாகவா முனிவர். சென்னை வேளச்சேரியில் இருந்துதாம்பரம் செல்லும் வழியில் மேடவாக்கத்தில் அவரது வீடு உள்ளது.

தனி ஆசிரமமோ, கோயிலோ கட்டாமல், தன்னை சந்திக்க வருபவர்களை தனது வீட்டு முற்றத்தில் சந்தித்துபேசுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அவரிடம் ஏதோ சக்தி இருப்பதாக நினைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் நுற்றுக்கணக்கானவர்கள் அவரது வீட்டுக்கு வந்து அவரிடம் ஆசி பெறுவதுண்டு.

திங்கள்கிழமை இரவு அவர் மிகவும் குளிர்வதாக தனது மகளிடம் கூறினார். பிறகு ஹாலில் வெறுந்தரையில்படுத்துத் தூங்கினார். செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரது உயிர்பிரிந்தது. அவரது உடல் செவ்வாய்கிழமை மதியம் 12.30 மணி வாக்கில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்குபொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர். செவ்வாய்கிழமைமாலை, அவர் தனக்கென வீட்டின் நடுவே சமாதி அறை ஒன்றை கடந்த 1991-ம் வருடமே கட்டி வைத்திருந்தார்.அந்த சமாதியில் யாகவா பிரம்மஸ்தலம் என்று எழுதப்பட்டுள்ளது.

அந்த அறையில் யாகாவா முனிவரின் உடல் அடக்கம் செய்யப்படும். எந்த வித சடங்கும் இல்லாமல் அடக்கம்செய்யப்படும். யாகாவா முனிவரின் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள புதுக்குடி. இவரது இயற்பெயர்லட்சுமணன். யாகாவா முனிவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், முருகன், சரவணன் என்று இரு மகன்களும்உள்ளனர்.

ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள வேதங்கள் தனக்குத் தெரியும். இப்பொழுது உள்ளவை வேதங்கள் அல்ல.திமிர் பிடித்த மதங்கள். எனவே கோயிலுக்குச் செல்லாதீர்கள்.

பெற்ற தாய்-தந்தையை வணங்குங்கள் என்று இவர் கூறி வந்தார். இந்தப் பிறப்பு தன்னுடைய 54 வது பிறவி என்றுகூறி வந்தார். 111 கட்டளை என்று ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிவந்தார். அதை வெளியிடவும்திட்டமிட்டிருந்தார்.

எதிர்காலத்தில் உழவன் தான் நாட்டை ஆள்வான் .

இந்தியா மிகப் பெரிய வல்லரசாகும். 138 நாடுகளில் 121 நாடுகள் அழியும். ஆகாயத்தில் பறக்கும் தட்டுக்கள்உலாவரும் இப்படி பல அதிரடி விஷயங்களை அவர் எழுதி வைத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X