For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் அலுவலகத்தை தகர்ப்பதாக தீவிரவாதிகள் மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 26 ம் தேதி வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமரின்அலுவலகத்தைக் குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு லஸ்கார் ஈ தொய்பா செவ்வாய்க்கிழமை மிரட்டல்விடுத்துள்ளது.

ரம்ஜானையொட்டி ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ள சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய்கூறியதற்கு லஸ்கார் ஈ தொய்பா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்குப் பின்னணியிலும், ஸ்ரீநகரில் ராணுவ தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்குப்பின்னணியிலும் இருப்பது லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகளே என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி செங்கோட்டையிலேயே தாக்குதல் நடத்தி விட்டோம். பிரதமர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்லலஸ்கார் ஈ தொய்பா என்று கூறியுள்ளது.

மேலும் அவர்கள் கூறுகையில் சண்டை நிறுத்தம் அர்த்தமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதுதவிர காஷ்மீரிலிருந்து இந்தியா தனது ராணுவவீரர்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X