For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்ப மேளா .. வடக்கு ரயில்வேக்கு ரூ. 8 கோடி வருமானம்

By Staff
Google Oneindia Tamil News

கும்ப் நகர் (உ.பி.):

உத்திர பிரதேச மாநிலம் கும்ப் நகரில் ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்த கும்ப மேளாவின்போதுபக்தர்களை ஏற்றிச் சென்றதன் மூலம் வடக்கு ரயில்வேக்கு ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

வடக்கு ரயில்வேயின் அலகாபாத் பிரிவுக்கு இந்த வருவாய் கிடைத்துள்ளது. இந்த பிரிவைச் சேர்ந்தசெய்தித்தொடர்பாளர் கூறுகையில், கடந்த 1989-ம் ஆண்டு நடந்த கும்ப மேளாவின்போது கிடைத்த வருவாயில்,362 சதவீதம் அதிகம் இது.

29 நாட்களிலும் மொத்தம் 187 முறை, கும்ப் நகருக்கு, அலகாபாத், நைனி, விந்தியாச்சல், சுபேதார்கஞ்ச், பாம்ராலிஆகிய நகர்களிலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டன. மொத்தமாக 1 கோடி பக்தர்கள் இந்த ரயில்களில் பயணம்செய்துள்ளனர்.

மகாகும்ப் விசேஷ ரயிலும் இயக்கப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயில்,அலகாபாத்-டெல்லியிலிருந்து ஜனவரி 21-ம் தேதி இயக்கப்பட்டது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X